பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/854

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

line-protocol

853

linkage editor


முறைமையில் ஒரு கோட்டின் இயற்பியல் பருமன்.

line-protocol (line discipline) : வரி மரபொழுங்கு : தகவல் தொடர்பு இணைப்பின் இரண்டு முனைகளும் தங்களுக்குள் புரிந்து கொள்கிற முறையில் தரவை அனுப்புமாறு உறுதி செய்யும் துண்மி வரிசையின் தொகுதி.

lines of code : குறிமுறை வரிகள்; குறியீட்டு வரிகள் : ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம் (வெற்று வரிகள், விளக்கவுரை உட்பட). சிலவேளைகளில் கட்டளை வரிகளை மட் டும் குறிக்கும். அல்லது ஒரு கட்டளைக் கூற்றி னைக் குறிக்கலாம்.

lines per minute (pm) : நிமிடத்துக்கான வரிகள் : வரி அச்சுப்பொறி ஒன்றின் வேகத்தை நிமிடத் துக்கு இத்தனை வரிகள் என்று குறிப்பிடு வதுண்டு.

lineup icons : சின்னங்களை வரிசைப்படுத்து.

linguistic knowledge : மொழியியல் அறிவு.

linguistic theories : மொழியியல் கோட்பாடுகள்.

linguistics : மொழியியல் : மனித மொழிகளைப் பகுப்பாய்வு செய்தல். மொழியிய லுக்கும் கணினி அறிவியலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இலக்கணம், சொல் தொடர் அமைப்பு, மொழிக் கொள்கை மற்றும் இயற்கை மொழிச்செயலாக்கம்ஆகியவை இரு இயல்களுக்கும் பொது.

Link : இணைப்பு : தொடர்பு : தரவு பரிமாற் றத்தில் ஒரு இடத்திற்கும் மற்றொன்றிற்கும் இடை யிலான இயற்பியல் இணைப்பு. அதன் பணி தரவுகள் மற்றும் செயற்கைகோள் தொடர்புகளை இணைத்தல்.

link adapter : தொடுப்புத் தகவி.

linkage : இணைப்பு : இரு தனித் தனி குறியீட்டு வாலாயங்களை இணைக்கும் குறியீட்டு முறைமை. நிரல் தொகுப்பு ஒன்றுடன், அதன் பயன் பாட்டின்போது கையாளப்படும் துணை வாலாயம் ஒன்றை இணைத்தல். calling sequence என்ப தைப் பார்க்கவும்.

linkage editor : இணைப்பு தொகுப்பி : இணைப்புப் பதிப்பி : தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல்