பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/856

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

link time

855

linux


என்பதை ஆராயும் செயல் முறை.

link time : இணைப்பு நேரம்; தொடுப்பு நேரம் : 1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம்.

link time binding : தொடுப்பு நேர பிணைப்பு : மொழி மாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங் காட்டி (identifier) க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல். இதுபோன்ற பணியை மூல நிரலை மொழிமாற்றம் செய்யும் போதோ, நிரலின் இயக்க நேரத்திலோ செய்ய முடியும்.

links : இணைப்புகள் : கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள்.

linotronic : லைனோடிராக் : அமெரிக்காவின் லைனோடைப் கார்ப்பரேஷன் உருவாக்கி உற்பத்தி செய்யும் அச்செழுத்துக் கருவியின் உரிமை பெற்ற தர வகை. லைனோ டிரானிக் 1200 - 2500 டிபிஐ அளவுக்கு மிக அதிக தெளிவு உள்ளது. வணிக முறையில் அச்சிடும் இடங்களில் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.

linpack : லின்பேக் : எண்முறை லீனியர் அல்ஜீப்ராவுக்கான ஃபோர்ட்ரான் நிரலாக்கத் தொடர்களின் தொகுப்பு. கணினியின் மிதக்கும் புள்ளி செயல்பாட்டினை சோதனை செய்யப்படும் 'பெஞ்ச் மார்க்' நிரலாக்கத் தொடர்களை உரு வாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

linus : லைனஸ் : லைனஸ் டோர் வால்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய x86 சிப்பு தொகுதிக்கான இலவசமாகக் கிடைக்கும் யூனிக்ஸ் இயக்க அமைப்பு.

linux : லினக்ஸ் : 80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லினஸ்டோர் வால்டு என்பவர் உருவாக்கினார். உலகிலுள்ள எண்ணற்ற ஆர்வலர்களும் லினக்ஸ் உருவாக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். இணையம் வழியாக மூல வரைவுடன் இலவசமாக வினி யோகிக்கப்படுகிறது. இலவசம் மட்டுமின்றி மூல வரைவினைப் பெற்று எவர் வேண்டுமானா

லும் மாற்றங்கள் செய்து மேம்படுத்தலாம். சில நிறுவனங்கள்