பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

list rows

858

live


களுக்கு மாற்றுவதற்கு வகை செய்யும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மொழிகள்.

list rows : பட்டியல்கிடைக்கைகள்.

LISTSERV : லிஸ்ட்செர்வ் : வணிக முறையிலமைந்த மிகவும் செல் வாக்குப் பெற்ற அஞ்சல் பட்டி யல். எல்-சாஃப்ட் பன்னாட்டு நிறுவனம் பிட்நெட், யூனிக்ஸ் மற்றும் விண்டோஸில் செயல் படும் பதிப்புகளை வெளி யிட்டுள்ளது.

list structure : வமைப்புகள் : டி. பி. எம். எஸ் அமைப்பில் தரவுவைச் சேமிக்கும்முறை. இதில் காட்டிகள் மூலம் பதிவேடுகள் இணைக்கப்படுகின்றன.

literal : நிலையுரு : மாற்றமிலி என்பதற்கு மாற்றுப்பெயர். இக்குறியீடு தன் விளக்கம் உடையது.

lithium ion battery : லித்தியம் அயனி மின்கலம் : உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்புச் சாதனம். வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டது. விலை அதிகமானபோதும் மடிக் கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்த தாய்க் கருதப்படுகிறது. ஏனெனில், மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள், சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்ப திலும், உயர் சேமிப்புக் கொள் திறனிலும் இது, நிக்கல் கேட் மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன் களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

litrary function : நூலகச்செயல் கூறுகள் : நூலகச் சார்பு மொழியகச் சார்பலன்

little endian : சிறு முடிவன் : எண்களை இரும முறையில் இருத்தி வைப்பதில் ஒருமுறை. குறை மதிப்புள்ள பைட் முதலில் இடம்பெறும். (எ-டு) A02B என்னும் பதினறும எண்ணை எடுத்துக் கொண்டால் சிறு முடிவன் முறையில் 2BA0 என்று பதிந்து வைக்கப்படும். இன் டெல் நுண்செயலிகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இம்முறை பின்னோக்கு பைட் வரிசைஎன்றும் அழைக்கப்படும்.

live : நேரடி நிகழ்நேர : 1. ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது. : 2. ஒர் இணைய தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி