பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/862

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

local bypass

861

localization


local bypass : உள்ளமை துணை வழி : உள்ளூர் தொலைபேசி நிறுவனத்தைப் பயன்படுத் தாமல் இரண்டு வசதிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது.

local group : உள்ளமை குழு;வட்டாரக் குழு : 1. விண்டோஸ் என்டியிலுள்ள பயனாளர் குழு. குழு உருவாக்கப்பட்டுள்ள பணிநிலையக் கன்னினியின் வளங்களை மட்டும் கையாளும் உரிமையும் சலுகை யும் பெற்ற ஒரு பயனாளர் குழு. பணி நிலையத் தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பயனாளர்கள் பணி நிலைய வளங்களை அணுக வசதியான ஒரு வழிமுறையை வட்டாரக் குழுக்கள் வழங்குகின்றன. 2. விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் இயக்க முறைமையில் வட்டாரக் குழு என்பது அதன் சொந்த களம் (own domain) அமைந்துள்ள வழங்கன் (server) கணினிகளின் வளங்களை மட்டும் அணுக உரிமையும் சலுகையும் பெற்ற பயனாளர்களின் குழு. களத்தின் வெளியேயும் உள்ளேயும் உள்ள பயனாளர்கள், அவர்கள் சார்ந்த களத்தின் வழங்கன்களிலுள்ள வளங்களை மட்டும் அணுக வட்டாரக் குழுக்கள் வாய்ப்பாக உள்ளன.

localhost : உள்ளமை புரவன் : ஒரு டீசிபி/ஐபி செய்தி அனுப்பப்படும் அதே கணினியை புரவனாக உருவகிக்கும் பெயர். உள்ளமை புரவனுக்கு அனுப்பப்படும் தரவு பொட்டலம் 127. 0. 0. 1 என்ற ஐபீமுகவரியைக் கொண்டிருக் கும். ஒரே கணினி கிளையனாகவும் புரவனாகவும் செயல்படும். உண்மையில் அச்செய்தி இணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

local intelligence : உள்ளமை நுண்ணறிவு; பகுதிப்பகுப் பாய்வு : முனையம் ஒன்றிலேயே அமைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தும் திறன் மற்றும் சேமிப்புத்திறன். அதனால் சில பணிகளைச் செய்ய கணினி ஒன்றுடன் இணைக்கத் தேவையில்லை.

localization : வட்டார மயமாக்கால் : ஒரு நிரலை அந்நிரல் பயன்படுத்தப்படும் நாடு/ஊர்/ மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் செயல்முறை. (எ-டு). சொல்செயலி மென்பொருளை வெவ்வேறு மொழிகளில் உருவாக்கும் நிரலர்கள் அட்டவணை களை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும். ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட