பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/864

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

location

863

locking a disk


துணை வாலாயம் (சப்ரொட் டீன்) போன்ற ஒரு நிரல் தொடர் கூறு மாடுல் மூலம் கட்டுப்படுத் தக்கூடிய மதிப்பினைக் கொண்ட மாறிலி. முதன்மை நினைவகம் அல்லது பிற கூறுகளால் அணுகக் கூடியதாகவோ அல்லாத தாகவோ இது இருக்கலாம்.

location:இருப்பிடம்;அமைவிடம்:கணினி ஒன்றின் நினைவகத்தில் தகவல்களைச் சேமிப் பதற்கான பகுதி.

location, bit:துண்மி அமைவிடம்;பிட் இருப்பிடம்.

lock:பூட்டு:1.கணினி ஆதாரத்தை ஒருவர் மட்டும் பயன்படுத்த உதவுதல்.2.மாற்றப்படுதல் அழித்தலிலிருந்து வட்டினை அல்லது நாடாக் கோப்பைப் பாதுகாத்தல்.

lock code:பூட்டுக் குறியீடு:பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான பூட்டுக் குறியீட்டைப் பயன் படுத்தாவிட்டால் பயனாளர் நிரல் தொகுப்பில் மாற்றங்களைச் செய்ய கணினி மறுக்கும்.

locked file:பூட்டிய கோப்பு:1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தரவுவை மாற்றியமைத்தல்,புதிய தரவுவைச் சேர்த்தல்,இருக்கும் தரவுவை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்படும் கோப்பு.2.அழிக்க முடியாத,வேறிடத் துக்கு மாற்ற முடியாத அல்லது பெயர் மாற்ற முடியாத ஒரு கோப்பு.

locked up keyboard:பூட்டப்பட்ட விசைப்பலகை :விசைகளின் இயக்கத்துக்கு கணினி இயங்க மறுக்கும் நிலைமை.

locked volume:பூட்டிய தொகுதி:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் சேமிப்பகங்களில் எழுத முடியாமல் தடுக்கப்படும் தொகுதி.ஒரு வன்பொருள் கருவி மூலமோ அல்லது ஒரு மென்பொருள் மூலமோ இவ்வாறு பூட்டிவைக்க முடியும்.

'locking a disk:வட்டைப்பூட்டல்::வட்டு ஒன்றின் உரிமை பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் அந்த வட்டு பூட்டப்பட்டதாகும்.கணினியின் பிற தரவு களினால் வட்டின் உள்ளடக்கங்கள் திருத்தப் படாமல் பாதுகாப்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது.