பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/866

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logical

865

logical design


செயலாக்க அமைப்பில் எண் முறைக் கணிப்புகள் செய்யும் அளவைப் பொருள்களுக்கிடையிலான இணைப்பு மற்றும் உண்மைப் பட்டியல்களைப் பயன்படுத்துவது பற்றிய அடிப்படைக் கொள்கை கள்.

logical : தருக்கமுறை : 1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி விடை சரி அல்லது தவறு என்கிற ஒற்றை விடையாக இருக்கும். 2. கருத்துருவாக நிலவும் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு. அதை உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கிய மில்லை.

logical add : தருக்கக் கூட்டல் : கணினி தருக்க இயக்கத்தில் ஒரு அளவை கூட்டல்.

logical comparison : தருக்கமுறை ஒப்பீடு : தரவு அல்லது விளக்கங்கள் போன்ற இரண்டு வகையான தரவுகளை ஒப்பிட்டு அவை ஒரே மதிப்புகளைக் கொண்டவையா என்பதை முடிவு செய்யும் தருக்கம்.

logical data : தருக்கமுறை தரவு : உண்மை அல்லது பொய் என்று பட்டம் தரப்பட்ட இரண்டு மதிப்புகளில் ஒன்று.

logical data design : தருக்கமுறை தரவு வடிவமைப்பு.

logical data elements : தருக்கமுறை தரவுப் பொருள்கள் : எந்த பருப்பொருள் ஊடகத்தின் மீது பதியப்படுகிறது என்பதற்குத் தொடர்பில்லாத சுயேச்சையான தரவுப் பொருள்கள்.

logical data group : தருக்கமுறை தரவுக்குழு : பல மூலாதாரங்களில் இருந்து எடுக்கப்படும் விவரம்.

logical data system Design : தருக்க முறை தரவு அமைப்பின் வடிவமைப்பு : தரவுகளுக் கிடையிலான உறவைக் காட்டும் வடிவமைப்பு. பயன்பாட்டு நிரல் தொடர்கள் அல்லது தனிப்பட்ட பயன்படுத்துபவர்கள் தரவுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது.

logical decision : தருக்கமுறை முடிவு : இரண்டு வகையான செயல்முறைகளில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது. மதிப்புகளை ஒருவாறு ஒப்பிடுதலை அடிப்படையாகக் கொண்டது.

logical design : தருக்கமுறை வடிவமைப்பு : குறியீட்டுத் தருக்க முறையில் ஒரு கணினி அமைப்புப் பகுதிகளுக்குள்


55