பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/867

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logical device

866

logical operations


செயல் உறவு எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பது.வன்பொருள் இயக்கத்தின் தொடர் பின்றி அமைவது.

logical device:தருக்க சாதனம்:ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படை யில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம்.(எ-டு) எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் ஒற்றை நெகிழ்வட்டு இயக்ககம் 'ஏ' என்றழைக்கப்படும். அதனையே பி என்றும் பெயரிடலாம்.கணினியில் இரு நெகிழ் வட்டகம் இல்லாத போதும் DISKCOPY A. B:என்று கட்டளை அமைக்கலாம்.இதில் B என்பது தருக்க சாதனமாகச் செயல்படுகிறது.

logical drive:தருக்கமுறை இயக்கி:தனி அலகாக நிர்வகிக்கப்பட்டு பெயரிடப்படும் பருப் பொருள் இயக்கியில் ஒதுக்கப்பட்ட பகுதி.

logical error:தருக்கமுறைப் பிழை:நிரல் தொடர் மொழி இலக்கணப்படி சரி என்றாலும் தவறான செயல்முறை ஏற்படக் காரணமான நிரல் தொடர் அமைப்புப் பிழை.

logical expression:தருக்க வெளிப்பாடு: உண்மை அல்லது பொய் என்பதை வெளிப்படுத் தும் வெளிப்பாடு.

logical field:தருக்கப் புலம்: ஆம்/இல்லை,உண்மை/பொய் ஆகியவைகளைக் கொண்டுள்ள நிரல் புலம்.

logical file:தருக்கமுறைக் கோப்பு: ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப்பதிவேடு களின் தொகுப்பு.

logical inference:தருக்க முடிவுகள்.

logical instruction:அளவை முறை ஆணை :'குறியீட்டு தருக்கமுறையில் வரையறுக்கப் பட்ட இயக்கத்தை கணினியைச் செய்ய வைக்கும் ஆணை.

logical lock:தருக்கமுறைப் பூட்டு: தரவு களைப் பயன்படுத்துவதிலிருந்து பயன்படுத்து பவரைத் தடுப்பது.மென்பொருள் பயன்படுத்து வதன் மூலம் கோப்பு அல்லது பதிவேட்டில் அடையாளமிட்டு இதைச் செய்யப்படுகிறது.

logical multiply:தருக்கமுறொப் பெருக்கல்:

logical operations:தருக்கமுறை இயக்கங்கள் : தருக்க முறை