பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/868

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

logical operator

867

logical type field


அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது.

logical operator : தருக்க இயக்கி : AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று.

logical product : தருக்கமுறைப் பொருள் : பல சொற்களின் AND பணிகள். அனைத்து சொற் களும் 1 ஆக இருக்கும்போது பொருள் 1 ஆக இருக்கும். அப்படி இல்லை யென்றால் ‘0’ ஆகி விடும்.

logical product : தருக்கமுறைப் பெருக்கற் பலன்.

logical reasoning : தருக்கமுறை விளக்கச் செய்முறைகள்.

logical record : தருக்கப் பதிவேடு : அதன் பருப்பொருள் இருப்பிடத்திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களிலும் இதை சேமிக்க முடியும்.

logical representation : தருக்கமுறைக் குறிப்பீடு : 'தருக்கமுறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு.

logical rules : தருக்கமுறைச் சட்டங்கள்.

Logical sector number : தருக்கமுறைப் பிரிவு எண் : தட்டு பிரிவுகளை பக்கம் எக்ஸ், வழித் தடம் எக்ஸ், பிரிவு எக்ஸ் என்று பிரிப்பதற்குப் பதிலாக, தருக்க முறை பிரிவு எண்கள் தட்டின் வெளிப்புற விளிம்பிலிருந்து தொடங்கி எல்லா பிரிவுகளையும் எண்ணி ஒரு பிரிவின் இடத்தைக் குறிப்பிடுகிறது.

logical sum : தருக்கமுறைக் கூட்டுத் தொடர் : தருக்க முறைக் கூட்டல் : பல சொற்களின் உள் வாங்கும் or செயல். ஒன்று அல்லது எல்லா சொற் களும் 1 ஆக இருந்தால் தொகையும் 1 ஆக இருக்கும். எல்லாம் 0 ஆனால் அதுவும் 0 ஆகும்.

logical symbol : தருக்கமுறைக் குறியீடு.

logical system design : தருக்க அமைப்பு வடிவமைப்பு : அடிப்படை தரவு அமைப்பு பயன் படுத்துபவரின் தேவையை எந்த அளவு சமாளிக் கிறது என்பதற்கான பொதுவான தருக்க முறை களை உருவாக்குதல்.

logical type field : தருக் வகைப் புலம்.