பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

application programming

86

appointment order



காணப் பயன்படுத்துவதற்கு உரிய நிரல்களின் தொகுப்பைத் தயாரித்தல். இது முறைமைத் தொகுப்பைத் தயாரித்தலுக்கு மாறானது.

application programming interface : பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

application programms : பயன்பாட்டு நிரல்கள்.

applications, computer : கணினிப் பயன்பாடுகள்.

application shortcut key : பயன்பாட்டு சுருக்குவழி விசை : பயன்பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின் (menu options) மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித்தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை ஒன்றிரண்டு விசைகளை ஒருசேர இயக்குவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தகைய விசை அல்லது விசைகள் சுருக்குவழி விசை என்று அழைக்கப்படுகிறது. இம்முறையை விசைப் பலகைச் சுருக்குவழி (keyboard shortcut) என்றும் கூறுவர்.

application software : பயன்பாட்டு மென்பொருள் : பயன்படு நிரல்கள் தொகுப்பு என்பதைக் காண்க.

app!ication specific programms : பயன்பாடு சார்ந்த நிரல்கள் : வணிக அறிவியல், பொறியியல் மற்றும் பிற துறைகளில் உள்ள இறுதிப் பயனாளரின் குறிப்பிட்ட பணிகளுக்கு உதவும் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு.

application restone button : பயன்பாட்டு மீட்புப் பொத்தான்.

application specific integrated circuit (ASIC) : பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைந்த மின்சுற்று.

application window : பயன்பாட்டுச் சாளரம், பயன்பாட்டுப் பலகணி.

application wizard : பயன்பாட்டு வழிகாட்டி

applied mathematics : பயன்பாட்டுக் கணிதம் : எந்திரவியல், இயற்பியல், அல்லது கணினி அறிவியலில் நடைமுறைப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் கணிதம்.

apply : செயலாக்கு.

apply filter : வடிகட்டி பயன்படுத்து.

applying : பயன்படுத்துதல்.

appointment order : பணி ஆணை.