பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/877

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

low bandwidth

876

low memory


புதுப்பிக்கும் பணியில் மொத்தப் பதிவேடுகளில் ஒரு சிறிய பகுதியே செயல்பட்ட நிலை.

low bandwidth : குறுகிய அலைக்கற்றை,

low density : குறைந்த அடர்த்தி.

lower கீழ்நிலை;கீழ்த்தட்டு : டிபேஸ்/ சி-யில் ஒரு செயல் முறை. அதன் வாக்குவாத சரத்திற்குச் சமமான சிறிய எழுத்து சரத்தினைத் திருப்பி அனுப்புகிறது.

lower case : சிறிய எழுத்து; கீழ்த்தட்டு எழுத்து : தலைப்பு எழுத்து இல்லாத அகர வரிசை எழுத்துகள். விடிடீஎஸ் (VDTS) -இல் இதைப் பயன்படுத்த முடியாது.

lower level management : கீழ்மட்ட நிர்வாகம் : குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான இயக்கும் முடிவுகளை எடுக்கும் முதல்வரிசை மேற்பார்வை யாளர்கள்.

lowest layer : அடிநிலை அடுக்கு.

low frequency குறைந்த அலை வரிசை : 30 முதல் 300, 000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை.

low level format : கீழ்நிலை படிவம் : ஒருவன் தட்டின் அடிப்படை (ஆரம்ப) நிறுவுதல், வன்வட்டின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் இது நடைபெறுகிறது. வன்வட்டு இயக்கியில் பிரிவு தலைப்புகளை அடையாளம் செய்யும் செயல்முறை. பல வட்டு மேலாண்மை பயன்பாடுகளில் 'முன் படிவம்' எனப்படும் கீழ்நிலை படிவ அமைப்பும் செய்யமுடியும்.

low level language : அடிநிலை மொழி; தாழ்நிலை மொழி : பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்கும்.

low memory : கீழ் நினைவகம்;அடி நினைவகம் : மீச்சிறு எண்களால் சுட்டப்படும் நினைவக இருப்பிடங்கள். ஐபிஎம் பீசி களில் 1 மெகாபைட் நினைவகப் பரப்புக்குள் இருக்கின்ற முதல் 640 கிலோபைட் அளவுள்ள நினைவகப் பகுதி கீழ் நினைவகம் எனப்படுகிறது. கீழ் நினை வகப் பகுதி, ரேம் (RAM) நினைவகத்துக்கென ஒதுக்கப்படுகிறது. எம்எஸ் டாஸ் இயக்க முறைமையும் பயன்பாட்டுப் புரோகிராம்களும்