பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/884

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

machine learning

883

macintosh


வட்டுக்குத் தனியாக ஏற்றப்படும்.

machine learning : எந்திரம் கற்றல்; பொறியாய்வு : பழைய செயல்களை அடிப்படையாகக் கொண்டு தன் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் பட்டறிவு சார் (ஹீயரிச) முறை.

machine operator : எந்திர இயக்கர்; பொறி இயக்குநர்.

machine oriented language : எந்திரம் சார்ந்த மொழி; பொறி சார்ந்த மொழி : மனித மொழியைப் போலல்லாமல் எந்திர மொழியை பெரிதும் ஒத்திருக்கும் நிரல் தொகுப்பு மொழி.

machine readable information : எந்திரம் அறிந்துக்கொள்ளக் கூடிய செய்தித் தரவு ; பொறி அறியத்தக்க தரவு : எந்திரம் ஒன்றினால் உணரக்கூடிய அல்லது படிக்கக் கூடிய வகையில் ஏதாவது ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தரவு. எந்திரம் உணர்நிலை என்றும் கூறப்படுகிறது.

machine sensible information : பொறியுணர் தரவு.

machine time, available : கிடைக்கக் கூடிய எந்திர நேரம்; கிடைக்கும் பொறி நேரம்.

macintosh : மெக்கின்டோஷ் : ஆப்பிள் கம்ப்யூட்டர் தயாரித்த

மெக்கின்டோஷ்