பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/887

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

macros

886

magnetic


'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவியை நிறுத்தி பெரியதுக்கு முக்கிய கட்டளையைக் கொடுப்பார். விசைக்கட்டளையை அழுத்தியவுடன், தேர்வுகள் செய்யப்படும்.

macros : குறுமங்கள்.

macro virus : மேக்ரோ நச்சு நிரல்; குறும நச்சுநிரல் : ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புடைய குறுமமொழியில் எழுதப்பட்ட ஒரு நச்சு நிரல். ஒர் ஆவணக்கோப்புடன் இந்த மேக்ரோ நச்சுநிரல் எடுத்துச் செல்லப்படும். ஆவணத்தைத் திறக்கும் போது நச்சுநிரல் இயக்கப்படும்.

Mac TCP : மேக் டீசிபீ : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன் படுத்தப்படும் டீசிபீ/ஐபீ நெறிமுறையின் மேக் வடிவம்.

Macwrite : மேக்ரைட் : சொல்லை வகைப்படுத்தும் செயல்முறை நிரல் தொகுப்பு. மெக்கின்டோஷ் கணினிக்கானது.

Macwrite II : மேக்ரைட் II : கிளாரிஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய அனைத்து அம்சங்களும் கொண்ட மெக்கின்டோஷின் சொல் செயலாக்க நிரல் தொடர். மேக் 128 மற்றும் 512 ஆகிய ஒவ்வொன்றுடன் ஒருங்கிணைத்து அனுப்பப்பட்டது.

mag : மேக் : Magnetic என்பதற்கான குறும்பெயர்.

Magazette : மேகசீட் : வட்டில் பதிவு செய்யப்படும் மேகசீன்.

magazine : இதழ்; சஞ்சிகை.

mag card : மேக் அட்டை : ஐபிஎம் கார்ப்பரேஷன் உருவாக்கிய மின்காந்த அட்டை. காந்தப்பொருள் பூசப்பட்டது. அதில் தரவு பதிவு செய்யப்படுகிறது. சொல் வகைப்படுத்து முறைமைகளில் அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது.

Magellan : மெகல்லன் : லோட்டசிலிருந்து பீ. சி. க்களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாடு. கோப்புப் பெயர்கள் மற்றும் உள்ளடக்கங்களைத் தேட உதவுகிறது. கோப்பு நோக்கியை இது பிரபலப்படுத்தியது. பல்வேறு தரவுக் கோப்புகளை, அவற்றை உருவாக்கியவரைப் போல நீங்கள் பயன்படுத்துவதற்காகத் தேட உதவுகிறது.

magnet : காந்தம்; மின் காந்தம்.

magnetic : மின் காந்தம் : காந்தத்தை உருவாக்குகிற, அல்லது காந்தத்தால் உருவாக்கப்படுகிற,