பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/889

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic core, bistable

888

magnetic field


விலான பொருள். காந்தமேற்றக் கூடியது. இரும இயக்கங்களை சேமிக்கும் திறனுடையது.

magnetic core, bistable : இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இரு நிலைக் காந்த வளையம்.

magnetic core memory : காந்த உள் மைய நினைவகம்.

magnetic core plane : காந்த வளைய நினைவுத் தளம்; காந்த அச்சுத் தளம் : காந்த அச்சு இணையம். ஒவ்வொரு அச்சும் ஒவ்வொரு சேமிப்பு இடத்துக்குப் பொதுவானது. பல காந்த அச்சுத்தளங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு காந்த அச்சு சேமிப்பு அலகை உருவாக்குகிறது.

magnetic core storage : காந்த அச்சு சேமிப்பகம் : காந்த வளையத் தேக்ககம் : சேமிப்பு முறை. இதில் தரவுகள் இருமஎண் வடிவில் சேமிக்கப்படுகின்றன. குறு மின்காந்தப் புலன்களின் ஒட்ட வழியில் அவை சேமிக்கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த அச்சுகள் மின் இழப்பின்போது தரவுகளைச் சேமித்து வைக்கின்றன. இவை பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. தரவுகளை இழக்கும் சேமிப்பகத்துக்கு எதிரானது.

magnetic data storage device : காந்த முறை தரவு சேமிப்புச் சாதனம்.

magnetic disk : காந்த வட்டு; மின்காந்த மென்வட்டு : திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை பெறப்படுகின்றன.

magnetic disk unit : காந்த வட்டு அலகு; காந்த வட்டகம் : புறச் சேமிப்புக் கருவி. இதில் தரவுகள் காந்தமேற்றக்கூடிய வட்டுத் தளப் பகுதியில் பதிவு செய்யப்படுகின்றன.

magnetic domain : காந்தப்பகுதி, காந்தக் களம் : குமிழ் நினைவில் தரவுகளைக் குறிப்பிடும் காந்தமேற்றப்பட்டப் பகுதி.

magnetic drum : காந்த உருளை; காந்தப் பீப்பாய் : புறச் சேமிப்பு கருவி. இது காந்தமேற்ற தளத்தைக் கொண்ட உருளையை உடையது. இந்தத் தளத்தில் தரவுகளைப் பதிவு செய்யலாம்.

magnetic field : காந்த புலம் : ஒரு காந்தத்தினால் உமிழப்படும் புலனாகாத சக்தி.