பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/891

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic resonance

890

magnetic tape cartridge


பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் துருவம் கொண்ட (0 அல்லது 1 துண்மி) ஒரு சிறிய புள்ளி உருவாக்கப்படுகிறது. நாடாக்களைப் பதியும்போது, அழிக்கும்முனை முதலில் மேற்பரப்பைத் தூய்மைப்படுத்துகிறது. வட்டுகளில் இருப்பதுபோல தரவுகளின் பகுதி. இதில் அளவுடன் பொருத்தப்படுவதில்லை. படி/எழுது முனையை அதன் மீது செல்லவிடுவதன்மூலம் துண்மியின் துருவம் உணரப்படுகிறது. குமிழ் நினைவகம் ஒரு வகையான காந்தப்பதிவு முறை. ஆனால் வட்டுகள், நாடாக்கள் போல் அல்லாது இதில் மேற்பரப்பு நகர்வதில்லை.

magnetic resonance : காந்த எதிரொளிப்பு : காந்த ஒத்திசைவு : இம்முறையில் ஒரு துகள் அல்லது துகள் முறைகள் எதிரொலிப்பு முறையில் புறக்காந்தப்புலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

magnetic sensing devices : காந்த உணர்வுச் சாதனங்கள்.

magnetic storage : காந்தச் சேமிப்பகம்; காந்தத் தேக்ககம் : நாடா அட்டைகள், உருளைகள், அச்சுகள் மற்றும் பிலிம் போன்ற சேமிப்பு ஊடகங்களில் பொருள்களின் காந்தப் பண்புகளைப் பயன்படுத்தி சேமிக்கும் முறைமை.

magnetic store : காந்த செமிப்பகம்; காந்தத் தேக்ககம்.

magnetic strip card : காந்த வரி அட்டை, காந்தப்பட்டை அட்டை : கடன் அட்டையைப் போன்ற சிறிய அட்டை அதில் காந்த மேற்றப்பட்ட பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காந்த மேற்றப்பட்ட துண்டில் தரவுகளை எழுதலாம் அல்லது எழுதப்பட்டிருப்பதைப் படிக்கலாம்.

magnetic tape : காந்த நாடா : காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேமிக்கலாம். ஒரு நாடாச் சுருள் என்பது 750 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையது. இந்த நாடாவின் பரப்பில் தரவு எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ளத் தரவுகளை நாடா இயக்கிமூலம் பெறலாம்.

magnetic tape cartridge : காந்த நாடாச் சுருணை; காந்த நாடாப்பேழை : காந்த நாடா உள்ள சுருணை. இச்சுருணையில் நாடாச்சுருள் ஒன்று இருக்கும்.