பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/892

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic tape cassette

891

magnetic tapes and discs


இந்த நாடாச்சுருளை ஏற்கும் உருளை ஒன்றும் இருக்கும். மாற்றுச் சுழலிப்பொறி கருணை போன்றது. ஆனால் வடிவமைப்பில் சற்று வேறுபாடானது.

magnetic tape cassette : காந்த நாடா பேழை : காந்த நாடா சேமிப்புக் கருவி. 1/8 அங்குல காந்த நாடா பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றில் இருக்கும்.

magnetic tape cassette recorder : காந்த நாடாப் பேழை பதிவு கருவி : நாடாக்களை படிக்கிற மற்றும் அதில் எழுதுகிற, சேமிப்புக் கருவி. குறுங்கணினி முறைமைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

magnetic tape code : காந்த நாடாக் குறியீடு; காந்த நாடா குறிமுறை : காந்த நாடாவில் காந்த மேற்றப்பட்ட வடிவங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறைமை. காந்தமேற்றப்பட்ட வடிவங்கள் ஆல்பா எண்ணியல் தரவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

magnetic tape deck : காந்த நாடாத் தொகுப்பு : காந்த நாடா அலகு போன்றது.

magnetic tape density : காந்த நாடாத் திணிவு : காந்த நாடா அடர்த்திப் பதிவு : 2. 54 செ. மீ (1) காந்த நாடாவில் பதிவு செய்யக்கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. பொதுவான திணிவுகள் 800 மற்றும் 1600 எழுத்துகள்/ஓர் அங்குலம் என்பதாகும். ஆனால் சில கருவிகள் ஓர் அங்குலத்துக்கு 6, 250 எழுத்துகள் வரை படிக்கக் கூடியனவாகவும் எழுதக்கூடியவைகளாகவும் உள்ளன.

magnetic tape device : மின்காந்த நாடா கருவி.

magnetic tape drive : காந்த நாடா இயக்கி : நாடாவை ஒரு தலை முனையின்மீது நகர்த்தும் கருவி. காந்த நாடாப் போக்குவரத்து கருவி போன்றது.

magnetic tape recorder : காந்த நாடா பதிவி.

magnetic tape reel : காந்த நாடாச் சுருள் : காந்த நாடாவின் இயற்பியல் பண்புகளைப் பாதுகாக்க உதவும் சுழலி. நாடா பொதுவாக 1. 27 செ. மீ (1. 2 அங்குலம்) அகலம் உடையதாகும். 751. 52 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையதாகும்.

magnetic tapes and discs principle of recording : காந்த நாடாக்கள் மற்றும் வட்டுகளில் பதியும் கொள்கை : காந்த மேற்பரப்பில் தரவுவைச் சேமிக்க பதிவு செய்யும் முறையைப்