பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/895

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mail

894

mailing list manager


mail : அஞ்சல்.

mail bomb1 : அஞ்சல் குண்டு1 : மின்னஞ்சல் மூலமாக பயனாளர் ஒருவரின் அஞ்சல் பெட்டியை நிலைகுலையச் செய்தல். பல்வேறு வழிமுறைகளில் இதனை நிறைவேற்றலாம். ஏராளமான மின்னஞ்சல்களை ஒருவருக்கு அனுப்பியோ, மிகநீண்ட மின்னஞ்சலை அனுப்பியோ அவருக்கு இனி வேறெந்த அஞ்சலும் வரவிடாமல் செய்து விடலாம்.

mailbomb2 : அஞ்சல் குண்டு2 : பயனாளர் ஒருவருக்கு அஞ்சல் குண்டு அனுப்புதல். இதில் இரண்டு வகை உண்டு. ஒரேயொரு நபர் ஒரு மிகப்பெரிய மின்னஞ்சலைப் பயனாளர் ஒருவருக்கு அனுப்பலாம். இரண்டாவது வகை, ஏராளமான பயனாளர்கள் சேர்ந்து அறிமுகமில்லாத பயனாளர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் சாதாரண அளவிலான பலநூறு அஞ்சல்களை அனுப்பி வைத்தல்.

mail bot : மெயில்பாட் அஞ்சல்பாட் : மின்னஞ்சல்களுக்கு தானாகவே மறுமொழி அனுப்பிவைக்கும் ஒரு நிரல். அல்லது அஞ்சல் செய்திகளுக்கு இடையே இருக்கும் கட்டளைகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளும் ஒரு நிரல். அஞ்சல் பட்டியல் மேலாண்மை நிரல் ஓர் எடுத்துக்காட்டு.

mail box : அஞ்சல் பெட்டி : ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள இருப்பிடங்களின் தொகுப்பு. குறிப்பிட்ட புறநிலைக் கருவிகள் அல்லது பிற வகைப்படுத்திகளுக்கான தரவு சேமிப்புப் பகுதிகள்.

mailing list : அஞ்சல் பட்டியல் : (சொல் செயலகப் பயன்பாடுகள் போன்று) அச்சிடப்பட்ட ஆவணங்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் முகவரிகள் கொண்ட கணினி மய கோப்பு.

mailing list manager : அஞ்சல் பட்டியல் மேலாளர் : ஓர் இணைய அல்லது அகஇணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக, அஞ்சல் பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளுதல், நீக்கிவிடுதல். லிஸ்ட்செர்வ் (LISTSERV), (major domo) போன்றவை