பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

archiving

89

arithmetic coding


(2). கோஃபர் (gopher) மூலம் அணுகலாம். (3) வைய விரிவலை (www) யில் பார்வையிடலாம்.

archiving : ஆவணப்படுத்தல்.

arcnet : ஆர்க்நெட் : ஒரு கணினிப் பிணையக் கட்டமைப்பு.

area : பரப்பு.

area chart : பரப்புநிரல் படம் : வரைபட வகைகளுள் ஒன்று. கடந்த நான்கு காலாண்டுகளில் நடைபெற்ற விற்பனையின் அளவைக் குறிக்க இது போன்ற வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இருவேறு விவரக் குறிப்புகளைக் குறிக்கும் இரண்டு கோடுகளுக்கு இடையே நிறம் அல்லது புள்ளிகளால் நிறைத்துக் காட்டப்படும் பரப்பளவு.

area, common storage : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

area, constant : மாறாப் பரப்பு.

area density : பரப்பு அடர்த்தி.

area graph : பரப்பு வரைபடம்.

area, seek : தேடு பரப்பு.

area, search : பகுதி தேடல் : பெரும் எண்ணிக்கையிலான ஆவணத் தொகுதிகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பரிசீலித்தல்.

area, work : பணிப் பரப்பு.

argument : மதிப்புரு ;தரு மதிப்பு : ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள்.

argument list : மதிப்புருப் பட்டியல்.

argument seperator : மதிப்புரு பிரிப்பி,

arithmetic : எண் கணிதம் : 1. கணிதவியலின் ஒரு பகுதி உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இப்பணிகளைச் செய்யும் கணினி கருவியின் ஒரு பகுதி தொடர்பானது.

arithmetic address : எண் கணித முகவரி : எண்கணித முகவெண்.

arithmetic and logical operators : கணித மற்றும் தருக்கக் செயற்குறிகள்.

arithmetic check : எண்கணிதச் சோதனை.

arithmetic coding : கணித முறையாக்கம் : புள்ளிவிவர முறை தரவுகளை சுருக்கும்