பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/900

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

major sort key

899

maltron keyboard


உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழக இணைய தளம். cam.ac.uk - இங்கிலாந்திலுள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தளப்பெயர். நாட்டுக் குறிமுறை என்றும் அழைக்கப்படும்.

major sort key : வரிசையாக்க விசைத் திறவு: முக்கியமான வகைப்படுத்தும் விசை : தரவுகளைக் கொண் டுள்ள பகுதி (இறுதிப் பெயர் போன்றது) அதனைக் கொண்டு பெரும்பான்மையான தரவு வகைகளை வேறுபடுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல் இயலக்கூடியது. இக்களத்தில் இரட்டிப்பு நிகழும் பொழுது ஒரு கண்காணிப்பு வகைப் படுத்தும் விசை (முதல் பெயர் போன்றது) தேவையான வேறு பாட்டை வழங்க முடியும்.

make code : குறியீட்டை உரு வாக்கு : ஒரு விசையை அழுத் தியவுடன் உருவாக்கப்படும் நுண்ணாய்வுக் (ஸ்கான்) குறி யீடு. (பின்னர் விசை விடு விக்கப்பட்டவுடன் தடைக் குறி யீடு வருகிறது).

make MDE file: உருவாக்கு. எம்எஸ் அக்செஸில் உள்ள பட்டித் தேர்வு.

make new connection : இணைப்பை உருவாக்கு.

male connector செருகு இணைப்பி : மின் இணைப்பு களை உருவாக்க ஒரு செருகியில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட செருகு . Female connectorக்கு எதிரானது.

செருகு இணைப்பி

malfunction : பிறழ் வினை மையச் செயலகத் தில் அல்லது புறக் கருவியின் செயல்பாட்டில் ஏற்படும் பிழை. தவற்றின் விளைவு.

malice programme :தீய நிரல். தீச் செயல்முறை, தீயகட்டளைத் தொடர்.

maltron keyboard : விசைப்பலகை : மேலும் விரை வாகப் பணிகளை நடத்த உதவு கிற விசைப் பலகை வரிசை முறை. மரபு வழியான விசைப் பலகை முறைமையை விட எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.