பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/901

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΜΑΝ

900

Manchester code


MAN : எம்ஏஎன் மாநகர இணையம் : Metropolitan Area Network என்பதன் குறும்பெயர்.

management graphics : மேலாண் வரைவியல்; நிர்வாக வரைபடம் : வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விளக்கும் பட்டியல். வரைபடம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தரவுகளை உணரவும் வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது.

management information service : மேலாண்மைத் தகவல் சேவை : ஒரு நிறுவனத்தில் ஒரு பணிப்பிரிவாக இயங்கும் துறை. தகவல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.

Management Information System (MS) : நிர்வாகத் தகவல் முறைமை மேலாண் தகவல் அமைவு : MS : அமைப்பு மேலாளர்களுக்குத் திட்டமிட, தொழிலாளர்களை அமைக்க, ஆணையிட மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த, தேவையான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் முறைமை.

management report : நிர்வாக அறிக்கை ; மேலாண் அறிக்கை : மேலாளர்களும், முடிவுகளை எடுப்போரும் தங்கள் பணிகளைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிக்கை.

management science : நிர்வாக அறிவியல்; மேலாண்மை இயல் : வணிகம் ஒன்றின் ஆதாரங்களை வழமையாக கணினி ஒன்றின் உதவியோடு நிர்வகிப்பது தொடர்பான கணிதவியல் அல்லது அளவீட்டு முறையிலான ஆய்வு.

manager : மேலாளர் : கணினி மையம், நிரல் தொகுப்புக் மென்பொருள் வளர்ச்சிக்குழு, சேவை நிறுவனம் மற்றும் பிறவற்றின் நடவடிக்கைகளை வழிகாட்டுகிற பொறுப்புள்ள மனிதர்.

managerial end user : நிர்வாக இறுதிப் பயனாளர் : தரவு அமைப்பைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் முதலாளி, மேலாளர் அல்லது மேலாளர்-நிலை தொழில் வல்லுநர். தரவு அமைப்புகளைச் சார்ந்துள்ள துறை அல்லது நிறுவனப் பிரிவின் மேலாளர்.

Manchester code : மான்செஸ்டர் குறியீடு : தானே நேரம் அமைக்கும் தரவு குறியீட்டு அமைப்பு. துண்மியை வரையறுக்கத்