பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/903

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

manual operation

902

mapping


கணினியைக் கையாள்வோர் கையால் பதிவுசெய்யும் தரவுகள்.

manual operation : கை முறை இயக்கம் : ஒரு முறைமையில் நேரடி கையால் இயக்கும் உத்திகளால் தரவுகளை வகைப்படுத்துதல்.

manual speed : கைமுறை வேகம், கைச்செயல் வேகம்.

manufacturer's software : தயாரிப்பவரின் மென்பொருள் : கணினி ஒன்றில் கணினித் தயாரிப்பாளர் வழங்குகிற அல்லது கிடைக்கச் செய்கிற நிரல் தொகுப்பு துணைக்கருவிகள்.

manufacturing information system : உற்பத்திக்கான தகவல் அமைப்பு : உற்பத்தி செயல்பாடுகளுக்கான திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றுதலை செய்யும் தகவல் அமைப்புகள். கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி முறை (சிஐஎம்) மற்றும் கேட், கேம் (CAD. CAM) போன்ற தொழில் நுட்பங்களும் இதில் உள்ளடக்கம்.

map : படம் : நிரல் தொகுப்பு ஒன்றின் பல்வேறு அம்சங்களும் அதன் தரவுகளும் சேமிப்புப் பகுதியைச் சுட்டிக்காட்டும் பட்டியல். இதனைச் சேமிப்புப் படம் என்றும் கூறுவார்கள்.

MAPI : மாப்பி; எம்ஏபீஐ : செய்தி வழி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள் Messaging Application Programming Interface தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒற்றைக் கிளையன் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் தொலைநகல் போன்ற வெவ்வேறு செய்திப்பரிமாற்ற மற்றும் பணிக்குழு பயன்பாடுகள் செயல்பட வழிவகுக்கும், மைக்ரோசாஃப்ட் வகுத்துள்ள இடைமுக வரன்முறை. விண்டோஸ் 95/என்டீ முறைமைகளில் மைக்ரோசாஃப்ட் எக்ஸேஞ்ச் என்ற பெயரில் இவ்வசதி உள்ளது.

map memoray : தொடர்புறுத்து நினைவகம்.

mapped drives : தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள் : 1. விண்டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கியுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நிலையிலுள்ள வட்டகங்கள்.

mapping : பதிலிடல்; விவரணையாக்கம் ஒரு ஒருங்