பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/906

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mask bit

905

mass storage


 பொருளால் செய்யக் கூடியதும், செய்யாமல் தடுக்கக்கூடியதுமான வன்பொருள் தலையீடுகள்.

mask bit : மறைப்பு துண்மி : கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்க வைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களையும் 0ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு) : தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி (bits) களும் மறைப்பு துண்மிகளாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன.

Mask design : மூடி வடிவமைப்பு : ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தையும் முகமூடி அமைப்பு முறை காட்ட வேண்டும். இணைப்பு இடம்பெறும் பரப்பளவைக் குறைக்க வேண்டும்.

masked : மூடப்பட்ட : முடக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட நிலை.

massage : செய்தி ; விவரம் : தகவல்களை வகை செய்ய.

massively parallel processing : பெருமளவு இணைநிலைச் செயலாக்கம் : ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரேம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென்பொருளின் நகலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக்கூடிய தரவுப் பகுதி, ரேமில் இருக்கும்.

mass storage : பெரும் சேமிப்பகம்; பெரும் தேக்ககம் : நேர்