பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/909

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

masterislave system

908

mathematical functions


 கணினியுடன் இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அடிமைக் கணினிகளைக் கொண்ட கணினி முறைமை. தலைவர் கணினி இணைக்கப்பட்டுள்ள அடிமைக் கணினிக்குப் பட்டியல் பணிகளையும் பிற வேலைகளையும் வழங்குகிறது.

master/slave system : தலைமை/அடிமை முறைமை.

master volume : முதன்மைத் தொகுதி.

match : இணை; பொருத்தம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகை தரவுகளுக்கு இடையிலான பொருத்தத்தைச் சோதித்தல்.

match case : வடிவப் பொருத்தம் பார்.

matching : இணைவு பார்த்தல் ; பொருத்தம் பார்த்தல் : இரண்டு கோப்புகளை அவற்றில் இணையான வகைத் தரவு அல்லது தரவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தரவுகளை வகைப்படுத்தும் நடைமுறை.

material requirements planning : பொருள் தேவையைத் திட்டமிடல் : சார்ந்து நிற்கும் பொருள் வகைகளுக்கான இருப்பறியும் கணினி சார்ந்த உத்திகள்.

Math coprocessor : கணித இணைச் செயலகம் : 386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்கள் எத்தகைய பயன்பாடுகளுக்கு பலன் தர வல்லது என்பதில் மிகுந்த வாக்கு வாதங்கள் உள்ளன. அதைத் தன்னுடைய சிப்புவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 486 செயலகங்கள் இக்கேள்வியை மழுங்கடித்து விட்டன.

mathematical expression : கணிதத் தொடர், கணிதக் கோவை : முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 10-3.

mathematical functions : கணிதச் செயற்கூறு ; கணிதவியல் பணிகள் : பெரும்பாலான நிரல் தொகுப்பு மொழிகளில் கிடைக்கக்கூடிய வாலாயமான கணிதத் தொகுப்பு. மொழியின் ஒரு பகுதியாக பொதுவாக வழங்கப்படுகிறது.