பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/913

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

maximum value

912

McCarthy, john


விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி ஆகியவற்றில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள ஒரு பொத்தான். தாய்ச் சாளரம் அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, இந்தப் பொத்தான் மீது சொடுக்கினால் போதும்.

maximum value : அதிக பட்ச மதிப்பு.

mb : எம்பி : Megabyte என்பதன் குறும்பெயர்.

. mb. ca : . எம். பி. சி. ஏ : ஓர் இணையதள முகவரி கனடா நாட்டின் மின்டோப் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MBONE or Mbone : எம்போன் : பல்முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast backBONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை பிற தளங் களுக்கு ஒரே நேரத்தில் பரப்பும் திறன் பெற்றவை. ஒன்றிலிருந்து பலவற்றுக்கு பல்முனைப் பரப்பை ஐ. பீ (Multicast-IP) நெறிமுறையைப் பயன்படுத்தி அதிவேகத் தரவு பொதிகளை அனுப்பவும் பெறவும் உதவும் தனிச்சிறப்பான மென்பொருளை எம்போன் தளங்கள் பெற்றுள்ளன. ஒளிக்காட்சிக் கலந்துரை யாடல்களுக்கு (video conferencing) பயன்படுகிறது.

Mbps : எம்பிபீஎஸ் : ஒரு வினாடியில் இத்தனை மெகா பிட்டுகள் என்று பொருள்படும் Megabits per second என்பதன் சுருக்கம். ஒரு மெகாபிட் என்பது ஏறத்தாழ பத்து இலட்சம் துண்மிகளைக் கொண்டது.

. mc : எம்சி : ஓர் இணைய தள முகவரி மொனாக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MCC : எம்சிசி : Microelectronics and Computer Technology Corporation என்பதன் குறும்பெயர். மிக நவீன கணினி குறித்து ஆய்வு நடத்த 13 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஒரு அமெரிக்கக் கூட்டமைப்பு.

McCarthy, John : மெக்கார்த்தி, ஜான் : LISP நிரல் தொகுப்பு மொழியை 1958இல் உருவாக்கி யவர். மேலும் எதிர்வினைக்