பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/919

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

memory, bubble

918

memory data register


memory, bubble : குமிழி நினைவகம்.

memory capacity : நினைவகக் கொள்திறன்.

memory card : நினைவக அட்டை : எடுத்துச் செல்லக் கூடிய கணினிகளில் வட்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் கடன் அட்டை அளவுள்ள நினைவக (மாடுல்) ஐசி அட்டைகள், ரோம், ரேம் அட்டைகள் என்றெல்லாம் அழைக்கப்படும். இவை பலவகையான சில்லுகளைப் பயன்படுத்து கின்றன. ரேம் அட்டைகள் பேட்டரியைப் பயன் படுத்தி செல்களுக்கு மின்சக்தியை நினைவகம் அமைந்துள்ள அச்சிட்ட மின்சுற்று அட்டைகளுக்கு ஏற்றுகின்றன.

memory cell : நினைவக அறை : நினைவுப் பதிப்பி சிப்பு : நினைவகத்தின் ஒரு துண்மி. மாறும் ரேம் நினைவகத்தில். ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள் திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ரேம் நினைவ கத்தில் ஐந்து டிரான்சிஸ்டர்களைக் கொண்டு ஒரு அறை உருவாகிறது.

memory check : நினைவக சரிபார்ப்பு.

memory chip : நினைவகச் சிப்பு : மின்னேற்ற வடிவில் தகவலைச் சேமிக்கிற அரைக் கடத்திச் சாதனம். வழக்கமாக இவை நினைவகப் பலகைகள் அல்லது அமைப்புப் பலகைகளில் பொருத்தப் பட்டிருக்கும்.

memory control block : நினைவகக் கட்டுப்பாடு கட்டம் : நினைவகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் ஆரம்பத்திலும் டாசில் (DOS) அமைக்கப்பட்டுள்ள 16 எண்மி அளவுகோல் கட்டம். அதன் நினைவக ஒதுக் கீட்டுப் பணிகளின் மூலம் நிரலாக்கத் தொடரை இது அமைக்கிறது.

memory core : உள்ளக நினைவகம்.

memory cycle : நினைவுச் சுழற்சி : ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம்.

memory cycle time : நினைவக சுழற்சி நேரம் : ஒரு நினைவக சுழற்சியைச் செய்வதற்கு அது எடுக்கும் நேரம்.

memory data register (MDR) : நினைவகத் தரவுப் பதிவகம் : தலைமை நினைவகத்திற்கு வந்து போகும் அனைத்துத் தரவு நிரல்களையும் தற்காலிகமாக வைத்திருக்கும் ஒரு சிறப்பு நினைவகம்.