பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/924

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

menu option

923

mesh network


menu option : பட்டித் தேர்வு.

merge : சேர்ப்பு;சேர்;இணைப்பு : பொருள் வரிசைகளை மாற்றாமல் பொருள்களை வரிசை முறையில் சிலவற்றை இணையாகவும் சேர்த்தல்.

merge cell : கலம் இணைத்தல்;கலம் சேர்த்தல் : சொல்செயலிப் பயன்பாடுகளில் ஒர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களை ஒரே கலமாக்க உதவும் கட்டளை.

merge document : ஆவணச் சேர்ப்பு;இணைப்பு ஆவணம்;ஆவண இணைப்பு.

merge print programme : இணைப்பு அச்சிடு நிரல் தொகுப்பு : கணினியைப் பயன்படுத்துவோர் தனக்கெனத் தேவையான கடிதங்களைத் தயாரிக்க உதவுகிற நிரல் தொகுப்பு.

merge purge : இணைப்பு-தூய்மையாக்கு : இரண்டு அல்லது மேற்பட்ட பட்டியல்களை ஒன்றாக்கி தேவையில்லாதவற்றை நீக்குதல். சான்றாக, ஒரு புதிய பெயர், முகவரிப் பட்டியலுடன் பழைய பட்டியலைச் சேர்த்து குறிப்பிட்ட அளவு கோலுக்குட்பட்டு இரண்டாவது தடவையாக வரும் பெயர்களை நீக்குதல்.

merge workbooks : பேரேடுகளை ஒன்றிணை.

mesa : மேடு : ஜெர்மானியம் அல்லது சிலிக்கான் தகடுகளில் அவற்றைச் செதுக்கும்போது பாதுகாக்கப்பட்டு அதன் காரணமாய், செதுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளைவிட சற்றே உயரமாய்த் தோற்றமளிக்கும் ஒரு பகுதி.

MESFET : மெஸ்ஃபெட் : Metal semiconductors field effect transistor என்பதன் குறும்பெயர். (உலோக அரைக்கடத்திகள் கள நிலை மின்மப் பெருக்கி) முக்கியமான் செயலூக்கமுள்ள சாதனமான கல்லியம் ஆர்சனைடு ஒருங்கிணைந்த இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மின்னேற்றத் திற்கும் மின் அகற்றலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

mesh : வலை கண்ணி : ஒரு வலைப் பின்னலில் உள்ள மூடப்பட்ட வழியை உருவாக்கும் கிளைகள்.

mesh network : வலைப் பிணையம் : வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு