பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ARP request

92

arrival rate


ARP request : ஏஆர்பி கோரிக்கை : முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணைய முகவரியைக் கொண்டிருக்கும். கோரிக் கையைப் பெறும் கணினி தனக் குரிய ஈதர்நெட் முகவரியுடன் பதிலை அனுப்பும்.

ARQ : ஏஆர்கியூ : தானியங்கு முறையில் மீண்டும் அளிப்பதற்கான வேண்டுகோள். Automatic Repeat request என்பதன் குறும்பெயர். தரவு வழங்கப்படுவதை கண்காணிக்கும் பாணி

arrange : ஒழுங்கமை.

arrangement : ஏற்பாடு : வரிசை ஒழுங்கு பொருள் பட்டியல் சொற்களின் வரிசையொழுங்கு அல்லது ஒரு அமைவில் உள்ள தரவு வகைகள்.

Array : கோவை : வரிசை : தொடர்புடைய பொருள் வகைகளின் வரிசை.

array and sringes : கோவை மற்றும் சரம்.

array bound : கோவை வரம்பு

array dimension : கோவை பரிமாணம்.

array element : கோவை உறுப்பு : வரிசைப் பொருள் வரிசையில் உள்ள ஒரு கூறு.

array index number : கோவை இடஞ்சுட்டு எண் : வரிசை அடையாள எண் : ஒரு வரிசை உள்ள குறிப்பிட்ட பொருளை அடையாளம் காட்டும் இருப்பிட வரிசை எண்.

array iterator : கோவை வரிசை இயக்கி : ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி.

array processor : கோவைச் செயலி ; வரிசைச் செயலி : அணி கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகச் செய்யக் கூடியது.

array reference : கோவைக் குறிப்பி ; வரிசைக் குறிப்பு : எந்த வரிசையிலும் அணுகக் கூடிய சிறப்புத் தரவு மதிப்பு.

arrival rate : வருகை வீதம் : குறிப்பிட்ட அளவு நேரத்தில் தரவு தொடர்புச் சாதனத்தில் எவ்வளவு தரவுகள் அல்லது எழுத்துகள் வருகின்றன எனும் வீதம்.