பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microinstructions

933

micromainframe



தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும்.

microinstructions : நுண்அறிவுறுத்தங்கள் : கணினி பயன்படுத்து கைவசமுள்ள எந்திர மொழியில் பெரும் அறிவுறுத்தங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த அளவு அறிவுறுத்தங்கள்.

microjacket : நுண்அட்டை : நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது.

microjustification : நுண்வரிச் சரியமைவு; நுண்வரிச் சரியாக்கம் : சில சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளில் சொற்களிடையிலும், சொற்களினுள்ள எழுத்துகளிடையிலும் சிறிய வெள்ளி எழுத்து இடை வெளிகளைச் சேர்த்திடு வதற்கான திறன். இது சாதாரணமாகச் சரிக்கட்டப்பட்ட பக்கங்களைவிட எளிதாகப் படிக்க உதவுகிறது.

microkernel : நுண் கருவகம் : 1. ஒர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகையான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண் கருவகம் இயக்கமுறைமையுடன் ஒரு வன்பொருள் சாரா இடைமுகத்தை வழங்குகிறது. எனவே ஒர் இயக்க முறைமையை வெவ்வேறு பணித் தளங்களில் செயல்பட வைக்க வேண்டுமெனில் நுண் கருவகத்தை மட்டும் மாற்றி எழுதினால் போதும். 2. ஒர் இயக்க முறைமையின் மிக அடிப் படையான பண்புக் கூறுகளை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு கருவகம்.

micrologic : நுண் தருக்க (அளவை) முறை : ஒரு நுண் செயல் முறையில் அறிவுறுத்தங்களை உருமாற்றம் செய்வதற்கு நிரந்தரமாகச் சேமிக்கப்பட்ட ஒரு செயல்முறையைப் பயன்படுத்துதல்.

micromail : நுண் அஞ்சல் : ஏசிடி என்னும் இங்கிலாந்து கணினி நிறுவனம் உருவாக்கிய மின்னணு அஞ்சல்முறை.

micromainframe : நுண் பெருமுகம் : பெருமுக அல்லது ஏறக் குறைய பெருமுகக் கணினியின் வேகமுள்ள தனிநபர் கணினி (பீ. சி.).