பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/935

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microminiature

934

microprogrammable



microminiature : நுண்சிறுமம் : மிகமிகச் சிறிய மின்சுற்று அல்லது மின்னணு பொருள்கூறு. குறிப்பாக, ஏற்கெனவே மிகச் சிறிதாக்கப்பட்ட ஒர் உறுப்பின் திருத்தப்பட்ட வடிவம்.

microminiature chip : நுண்ம நுணுக்கச் சிப்பு : கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்று (LSI).

microminiaturization : நுண்ம நுணுக்கமாக்கம் : நுணுக்கமாக்கத்தை விட ஒருபடி சிறியதான மிகச் சிறிய வடிவளவு.

micron : மைக்ரோன் : பதின்மான நீட்டளவை அலகில், ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. ஏறத்தாழ ஒர் அங்குலத்தில் 1/25, 000.

microphone : நுண்பேசி : 1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றித் தரமுடியும். (எ-டு) பல்லூடக ஆவணங்களைப் பதிவு செய்தல்; ஒலிச் சமிக்கைகளை பகுத்தாய்தல். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் இயங்கும் ஒரு தகவல் தொடர்பு நிரல்.

microprocessor : நுண் செய்முறைப்படுத்தி : ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், வீட்டுச் சாதனங்கள், வணிக எந்திரங்கள், கணிப்புச் சாதனங்கள், பொம்மை விளையாட்டு ஒளிப்பேழை எந்திரங்கள், மற்றும் பல்லாயிரம் பிற சாதனங்களில் இரு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள்.

microprogrammable computer : நுண்செயல்முறை வகுத்திடத்தக்க கணினி : அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி அல்லது பிற நினைவுப்