பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/938

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microwave hop

937

middleware




நிறமாலையில் ஒரு பகுதியில் இந்த நுண்ணலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றி நீண்ட அலைவு நீளங்களின் பக்கத்தில் வானொலி அலைகளும் சிற்றலை நீளங்களின் பக்கத்தில் அகச்சிவப்பு அலைகளும் சூழ்ந்துள்ளன. இது தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

microwave hop : நுண்ணலைத் துள்ளல்; நுண்ணலைத் தாவல் : ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவிலுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை.

microwave relay : நுண்ணலை பரப்புகை : ஒரு கிகா ஹெர்ட்ஸுக்கும் கூடுதலான அலைவரிசையில் இருமுனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தகவல் தொடர்பு இணைப்பு.

microwave transmission lines : நுண்ணலை பரப்பீட்டுக் கம்பிகள் ; நுண்ணலை பரப்புத் தொடர் : மின் காந்த ஆற்றலை நுண்ணலை அதிர்வெண்களில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் கட்டமைவுகள்.

MICR reader : எம்ஐசிஆர் படிப்பி ; காந்த மை எழுத்து ஏற்புப் படிப்பி : மின் காந்த மையெழுத்து ஏற்புப் படிப்பி (Magnetic Ink Character Reader). இது மின்காந்த மையெழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் படித்துக்காட்டும் உட்பாட்டுச் சாதனம்.

middle level language : இடை நிலை மொழி  : எந்திர மொழி போன்ற அடிநிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர் நிலை மொழிக்ளின் எளிமையும் கொண்டிருப்பதால் சி-மொழி இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.

middleware : இடைப்பொருள் ; இடைமென்பொருள்  : இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செயல்படும். அல்லது ஒரு பயன்பாட்டுக்கும் ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமைக்கும் இடையே இருந்து செயல்படும். (எ-டு) கோர்பா மற்றும் பிற பொருள் முகவர் நிரல்கள், பிணைய மென்பொருள்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிரல்கள்.