பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/941

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

minemonic codes

940

minimal tree


 கோப்பினை அனுப்பி வைக்கும் போது அந்தக் கோப்புக்கு ஒரு மைம் வகையைக் குறிப்பிட்டு அனுப்புகின்றது. பெறுகின்ற பயன்பாடும் மைம் ஒத்தியல்பானதாய் இருக்க வேண்டும். மைம் வகை/உள் வகைப்பட்டியலுடன் ஒப்பிட்டு, பெற்ற ஆவணத்தின் உள்ளடக்கத்தைச் ச்ரியாகத் தீர்மானிக்கிறது. மைம் வகை உரை (text) எனில், சாதா (plain), ஹெச்டீஎம்எல் (html) என்ற இரு உள்வகை உள்ளன. மைம் வகை உரை/ஹெச்டிஎம்எல் எனில் அதை ஒர் ஹெச்டிஎம்எல் ஆவணமாக உலாவிகள் அடையாளம் காணும்.

minemonic codes : நினைவுட்டுக் குறியீடுகள்

mini : சிறிய; குறு; சிறு : நுண்ணிய கணினியின் சுருக்கப் பெயர்.

miniaturization : நுணுக்கமாக்கம்; சிற்றளவாக்கம் : ஒரு பொருளின் வடிவளவினை அதன் திறம்பாடு குறையாத வண்ணம், சிறியதாகக் குறைக்கும் செய்முறை. இதனை நுண்ம நுணுக்கமாக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க.

mini computer : குறுங்கணினி; சிறு கணினி : எண்மானக்கணினி. இது ஒரு நுண்மக் கணினியிலிருந்து (micro computer) வேறுபட்டது. இது அதிகச் செயல்திறனுடையது. அதிக ஆற்றல் வாய்ந்த நிரல்களைக் கொண்டது. இதன் விலையும் அதிகம். இதில் அதிகச் செயல்முறைகளும், செயற்பாட்டுப் பொறியமைவுகள் உள்ளன. இது, சிறிய வடிவளவும் குறைந்த விலையும், குறைவான தரவு கொள்திறனும் கொண்ட முதன்மைப் பொறியமைவிலிருந்து வேறுபட்டது. நுண்ணிய கணினி பொறியமைவு நான்கு செயற்பாட்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன : (1) நடு நுண்ணிய கணினி, (2) பெரும நுண்ணிய கணினி, (3) மீப் பெருமக் கணினி; (4) மீநுண்ணிய கணினி.

mini floppy disk : சிறு நெகிழ் வட்டு : நுண் கணினியமைவுகளில் பயன்படுத்தப்படும் 13. 3 செ. மீ. (5. 25") விட்டமுடைய நுண் வட்டு.

minimal : குறுமம்.

minimal pairs : குறும இணை ஒலிச்சொல் பட்டியல்.

minimal tree : குறும மரம் : இதன் முனையங்கள், இந்த மரத்தை பெரிதும் உகந்த அளவில் செயற்படுமாறு செய்