பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/942

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

minimax

941

minitower




யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது பெரும இணைப்பு மரத்திலிருந்து வேறுபட்டது.

minimax : குறுமப் பெருமம் ; சிறுமப் பெருமம் : ஒரு செய்முறையில் பெருமப் பிழையினை குறும அளவுக்குக் குறைத்திடும் உத்தி.

minimini computer : குறுஞ்சிறு கணினி : நுண்ணிய கணிப் பொறியமைவுகளில் மிகச் சிறிய வகை. இதில், ஒரு குறிப்பிட்ட அளவு செயற்பாட்டு அம்சங்களே அமைந்திருக்கும். இது, நடு நுண்ணிய கணினி, பெரும நுண்ணிய கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

minimize : சிறிதாக்கு : வரைகலை சூழ்நிலையில், ஒரு சன்னலை பிம்பம் அளவுக்குக் குறைப்பது.

minimize button : சிறிதாக்கு பொத்தான்  : விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3. x மற்றும் விண்டோஸ் என்டி 3. 5 ஆகியவற்றில் முகப்புத் திரையிலேயே ஒரு சின்னமாக அமர்ந்து கொள்ளும். விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0 மற்றும் அதற்குப் பின்வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் திரையின் அடிப்பகுதியிலுள்ள பணிப்பட்டையில் (Taskbar) சாளரப் பெயர் ஒரு பொத்தானாக அமர்ந்து கொள்ளும். அந்தப் பொத்தான்மீது சொடுக்கும் போது சாளரம் முந்தைய அளவுக்கு விரியும்.

minimum value : குறைந்தபட்ச மதிப்பு.

miniport drivers : சிறுதுறை இயக்கிகள் : ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தரவுவைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம்சாரா துறை இயக்கிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக் கொள்ளும்.

minitower : சிறு நெடுபெட்டி  : தரையில் செங்குத்தாய் நிற்கும் கணினி நிலைப்பெட்டி (cabinet). பொதுவாக கணினி முறைமைப் பெட்டி 24 அங்குல உயரம் இருக்கும். இதனை நெடு பெட்டி என்பர். சிறுநெடு பெட்டி 13 அங்குல உயரமே இருக்கும்.