பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/946

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. mn. us

945

modec


. mn. us : . எம்என். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. mo : . எம்ஓ : ஒர் இணைய தள முகவரி, மக்காவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

mobile computing : நடமாடும் கணிப் பணி;பயணக் கணிப் பணி : பயணம் செய்து கொண்டிருக்கும்போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப்பணிக்கு மேசைக் கணினியைவிட மின் கலத்தில் இயங்கு கின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது.

mobile radio systems : நடமாடும் வானொலி அமைப்புகள் : எந்த நாட்டின் தொலைபேசி அமைப்புக்கும் பயனுள்ள விரிவாக்கமாக மேட்ஸ் (MTS) எனப்படும் நடமாடும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு விளங்கும். வழக்கமான கம்பிகளால் இணைக்கப்பட்ட தொலைபேசிபோல ஒவ்வொரு நடமாடும் நிலையமும் ஒரு காரில் வானொலி தொலைபேசி இணைக்கப் பட்டு அதற்கு தனி எண் கொடுக்கப்படும். அதே நகரத்தில் உள்ள பிற இயங்கும் தொலைபேசிகளுடன் மட்டுமல்லாது மற்ற வழக்கமான தொலைபேசிகளுடன் உலகின் எந்தப் பகுதிக்கும் பேச முடியும்.

mobile robots : நடமாடும் எந்திர மனிதர்கள் (எந்திரன்) : மனிதர்களைப் போல, சில எந்திர மனிதர்களும் தாமாகவே ஒரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகரக்கூடியவை.

mobile users : நடமாடும் பயனாளர்கள்.

modal : படிமம்;மாதிரி : முறை சார்ந்தது. மாடல் இயக்கம் ஒரு முறை யிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றித் தருகிறது.

mode : முறைமை, செயற்பாட்டு முறை : சொல் சார்ந்த, இடைப் பரிமாற்ற அல்லது வரைகலை முறை உள்ளிட்ட ஒளி மூலமான காட்சி. ஒரு அமைப்பு இயக்கப்படுகின்ற இயக்க நிலை. இரண்டு சூழ்நிலைகள் இதில் ஏற்படலாம். வன்பொருள் மென்பொருளுக்கு எண்ணற்ற முறைகள் உள்ளன.

mode, batch processing : தொகுதிச் செயலாக்க பாங்கு.

modec : மோடெக் : தொலை தகவல் தொடர்பில், இலக்கமுறையில் (digital) மோடத்துக்குரிய தொடர்முறைக் சமிக்கைகளை உருவாக்கும் சாதனம். மாடு