பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/947

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

model

946

modeling


லேட்டர், டீமாடுலேட்டர் ஆகிய சொற்கள் இணைந்ததே மோடம். கோடர், டீகோடர் ஆகிய சொற்கள் இணைந்தது கேடெக். மோடம், கோடெக் ஆகிய சொற்கள் இணைந்து உருவானது மோடெக்.

model : உருப்படிவம்;படிமம் : அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெருமளவு கணிதமும் பயன்படுத்தப்படுகின்றன. சமன்பாடுகளுக்குத் தீர்வு காணவும், தேவையான கணிப்புகளைச் செய்யவும் கணினியைப் பயன்படுத்தினால் அது 'கணினி வடிவாக்கம்'எனப்படும். அறிவியல், வணிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளில் உருப்படிவமும், வடிவாக்கமும் மிகவும் இன்றியமையாதவை.

model base : மாதிரி அடிப்படை : கோட்பாடு, கணக்கீடு மற்றும் அளவைமுறை மாதிரிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுதி. வணிக உறவுகள், கணிப்பீடு நிரல்கள் அல்லது பகுப்பாய்வு நுட்பங்கள் போன்றவற்ற இவை விளக்குகின்றன. நிரலாக்கத் தொடர்கள், துணை நிரல்கள், கட்டளைகளைக் கோப்புகள் மற்றும் விரிதாள்கள் போன்ற வடிவங்களில் இத்தகைய மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன.

model-based expert system : மாதிரி-சார்ந்த வல்லுநர் அமைப்பு : ஒரு பொருளின் வடிவமைப்பு மற்றும் பணி பற்றிய அடிப்படை அறிவு சார்ந்த வல்லுநர் அமைப்பு. சான்றாக இத்தகைய அமைப்புகள் கருவியின் சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. Rule based expert system என்பதன் எதிர்ச்சொல்.

model dialog : உருப்படிவ உரையாடல்.

model geometric : வடிவ மாதிரியம்;வடிவ கணித உருப்படிவம் : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் வடிவமைக்கப்பட்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒர் உருவத்தை, ஒரு பகுதியை அல்லது புவி வரைகலைப்பரப்பை, முழுமையான முப்பரிமாண அல்லது இருபரிமாணப் புவியியல் வடிவ கணித அமைப்பில் உருவாக்கிக் காட்டுதல்.

modeling : உருப்படிவாக்கம் : ஒரு பொறியமைவின் சில