பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/950

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

moderator

949

modify


தடுத்து விடுகிறார். சிலவேளைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபாசச் செய்திகளையும் அவர் வடிகட்டி விடுவார்.

moderator : இடையீட்டாளர், நடுவர், கண்காணிப்பாளர் : சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்துவார், புறக்கணிப்பார் அல்லது வடிகட்டித் தடுத்து நிறுத்திவிடுவார்.

mode reset : மாற்றமைவு பாங்கு.

modification : திருத்தியமைத்தல்; மாற்றியமைத்தல்.

modification, address : முகவரி மாற்றியமைத்தல்;முகவரி திருத்தி அமைத்தல்.

modified frequency modulation encoding : திருத்தப்பட்ட அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசியமில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தைவிட அதிக அளவான தகவலை ஒரு வட்டில் பதிய முடியும். பெருவாரியான நிலை வட்டுகளில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Run Length Limited) குறியாக்க முறையைக் காட்டிலும் திறன் குறைந்ததே.

modifier : திருத்தியமைப்பி;மாற்றி.

modifier, character : எழுத்து மாற்றியமைப்பி.

modifier key : மாற்றம் செய்விசை : விசைப் பலகையிலுள்ள ஒரு விசை அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும்.

modify : திருத்தம் செய்தல் : 1. கணினி நிரலின் ஒரு பகுதியை அதன் இயல்பான பொருள் விளக்கத்திலிருந்தும் நிறைவேற்றத்திலிருந்தும் மாறுபடும் வகையில் மாற்றியமைத்தல். இந்த மாற்றம்,