பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/953

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

module

952

monochrome


செலுத்துவதற்கு ஏற்புடைய குழுஉக் குறிகளாக மாற்றுகிறது.

module : கூறு;தகவமைவு : ஒரு செயல்முறையில் தருக்க முறைப் பகுதிகளில் ஒன்று. ஒரு பெரிய செயல்முறையை தன்னடக்கமான பல தருக்க முறைத் தகவமைவுகளாகப் பகுக்கலாம். இந்தத் தகவமைவுகளைப் பல செயல்முறையாளர்கள் தனித்தனியே எழுதிச் சோதனை செய்யலாம். பிறகு இத்தகவமைவுகளை ஒன்றாக இணைத்து முழுச் செயல்முறையாக அமைத்து விடலாம்.

modulo : மீதி;வகுத்தல் தகவமைவுச் சார்பலன் : வகுத்தலில் மீதத்தைக் கொடுக்கும் ஒரு கணிதச் சார்பலன். 'x' என்ற எண்ணின் 'n'தகவமைவின் மூலம் x/n என்ற முழு எண் மீதம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டு 1000-இன் 84 தகவமைவு 1000/84 அல்லது 76.

moire : மங்கல்;தெளிவின்மை : பொருத்தமற்ற தெளிவுக்கூறுடன் ஒரு படிமம் திரையில் காட்டப்படும்போது அல்லது அச்சிடப்படும்போது மங்கலாக, மினுக்கலுடன் தெளிவின்றி இருத்தல். தெளிவின்மைக்கு பல அளபுருக்கள் காரணமாய் உள்ளன. படிமத்தின் அளவும் தெளிவும், வெளியீட்டுக் கருவியின் அளவு-தெளிவுடன் ஒத்தில்லாதபோது இந்த நிலை ஏற்படும்.

molecular beam epitaxy : மொலிக்யூலர் பீம் எபிடாக்சி : அடுக்குகளைப் பிரிப்பதனால் உருவாக்காமல் அணு அளவு அடுக்குகளைச் சிப்புவில் வளர வைக்கும் தொழில் நுட்பம்.

molecules : முலக்கூறுகள்.

momadic : எதிர் இயக்கச் செயற்பாடு;ஒருறுப்பு : எதிர் இயக்கி (NOT operated) போன்ற ஒரே இயக்கப்படு எண்ணை மட்டுமே பயன்படுத்துகிற ஒரு கணிதச் செயற்பாடு தொடர்பானது.

monitor : காட்சித்திரை கணித்திரை கண்காணிப்புத்திரை;திரையகம் : 1. கட்டுப்பாட்டுச் செயல்முறை அல்லது மேற்பார்வைச் சாதனம். 2. ஒளிப் பேழைக் காட்சித்திரை.

monitoring systems : கண்காணிப்பு முறைகள்.

monitor programme : கண்காணிப்பு நிரல்.

monochrome : ஒரே வண்ணத்திரை : ஒரே நிறமுடைய முன்னணியில் ஒரு நிறத்தையும்