பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/955

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monolingual

954

monte carlo method


செயல்பாட்டின் அடிப்படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC) யுடன் ஒத்தியல்பு உடையது.

monolingual : ஒற்றைமொழி.

monolingual coding : ஒற்றை மொழிக் குறிமுறை.

monolithic : தனிக் கன்ம அடுக்கு ஒருங்கிணைந்த : தனியொரு கன்ம அடுக்கு தொடர்பானது. இதன் அடிப்படையில் ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி உருவாக்கப்படுகிறது. தனியொரு கன்ம அடுக்குச் செயல் முறையில் பல்வேறு தனித்தனி தகவுச் செயல்முறைகளை இணைப்புத் தொகுப்பி மூலம் ஒருங்கிணைக்கலாம்.

monolithic integrated circuit : தனிக் கன்ம அடுக்கு ஒருங்கிணைப்பு மின்சுற்று வழி : ஒரு பொருளின் ஒரே பாளத்தில் அமைக்கப்படும் மின்சுற்று வழி. இது, கலப்பு மின்சுற்று வழியிலிருந்து மாறுபட்டது;இதில், தனித்தனிப் பாளங்களில் மின்சுற்று வழி அமைப்பிகள் அமைக்கப் பட்டிருக்கும்;அவை இறுதி மின்சுற்று வழியுடன் மின்னியல் முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

monolithic kernel : ஒரு சீரான கருவகம்.

monophonic : ஒரே ஒலியுடைய : ஒரு தனி வழித்தடத்தைப் பயன்படுத்தி ஒலியை மீண்டும் ஏற்படுத்துதல்.

monospace font : சமஇட எழுத்துரு : தட்டச்சில் பயன்படுத்தப்படும் எழுத்துருவைப் போன்றது. ஒவ்வோர் எழுத்தும் கிடை மட்டத்தில் ஒரே அளவான இடத்தை அடைத்துக்கொள்ளும். (எ-டு) i மற்றும் m ஆகிய இரண்டு எழுத்துகளும் அவற்றின் அகலம் எப்படி இருப்பினும் அடைத்துக் கொள்ளும் இடம் ஒரே அளவானதாக இருக்கும்.

monospacing : ஒற்றை இடை-வெளிவிடல் : ஒரு அங்குலத்துக்கு 10 எழுத்துகள் விடுவது போன்று ஒரே மாதிரியான குறுக்கு வாட்ட இடைவெளி விடுதல்.

monroe Jay R : மன்ரோ ஜே ஆர் : 1911இல், முன்பு ஃபிராங்க் பால்ட்வின் வடிவமைத்த வடிவமைப்புகளைப் பயன்படுத்தி, முதலாவது விசைப்பலகை சுழல் எந்திரத்தைக் கண்டு பிடித்து, வணிகமுறையில் பெரும் வெற்றி கண்டவர்.

monte carlo method : மான்டி கார்லோ முறை : ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் திரும்பத் திரும்பக் கணிப்புகளைச் செய்திடும்