பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/956

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

montissa

955

Morse code


முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகாண இந்த முறை பயன்படுகிறது.

montissa : மடக்கையின் பதின்மக் கூறு.

. montreal. ca : . மான்ட்ரீல். சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு மான்ட்ரீலைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

MOO : மூ : பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது, Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள்நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்று அழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன்பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது.

. moov : . மூவ், . எம்ஓஓவி : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப் படும் குவிக் டைம் மூவி ஒளிக்காட்சிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பின் வகைப்பெயர் (file extension).

MOOV : மூவ் : மெக்கின்டோஷின் குவிக்டைம் திரைப்படங்களுக்கான ஒரு கோப்பு வடிவம். உரை, கேட்பொலி, ஒளிக்காட்சி, கட்டுப்பாடு அனைத்தையும் ஒத்திசைந்த தடங்களில் சேமித்து வைக்கும்.

more than : மேலும்.

Morlund Samuel (1625-1695) : மோர்லண்ட் சாமுவேல் (1625-1695) : நேப்பியர் சட்டங்களை மேம்படுத்தி ஒரு பெருக்கல் கருவியைக் கண்டுபிடித்தவர். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு கணிதச் செய்முறைகளையும் கணக்கிடு வதற்கு ஒரு கணித எந்திரத்தை 1666இல் கண்டுபிடித்தார்.

morpher : உருமாற்றி.

Morphing : உருமாற்றம்.

Morse code : மோர்ஸ் குறியீடு : பத்தாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சாமுவேல் மோர்ஸ் உருவாக்கிய புள்ளிகளும் கோடுகளும் கொண்ட தகவல் குறியீடு. ஒரு புள்ளி என்பது ஒரு வோல்டேஜ் கொண்டு செல்லும் அலை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் கொண்ட ஒளிக்கற்றை ஆக இருக்கலாம்.