பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/959

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mouse button

958

mouse port


எலி வடிவச் சாதனம்

எலி வடிவச் சாதனம்

கள் அமைந்திருக்கும். இந்தப் பெட்டி ஒரு வால் போன்ற கட்டிழை மூலம் இணைக்கப் பட்டிருக்கும். நுண்பொறி நகரும்போது திரையில் சறுக்குச் சட்டம் இணையாக நகர்கிறது. குறிப்பிட்ட செயல்களுக்குக் குறிப்பிட்ட பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன. சறுக்குச் சட்டத்தைத் திரையில் எந்தத் திசையிலும் மூலை விட்டக் கோட்டிலுங்கூட இந்த நுண் பொறியால் நகர்த்த முடியும். இது இச்சாதனத்தின் மிகப்பெரும் நன்மையாகும்.


mouse button : சுட்டு நுண்பொறிப் பொத்தான் : கணினி நிரல்களை அனுப்புவதற்கு சுட்டு நுண்பொறியின் உச்சியிலுள்ள ஒரு விசை.


mousekeys : சுட்டி விசைகள் : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஒரு வசதி. பயனாளர், சுட்டிக் குறியை நகர்த்த விசைப்பலகையின் எண்களடங்கிய விசைத் தொகுதியைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. வழக்கமான சுட்டியை நகர்த்துவதில் இடர்ப்பாடு உள்ளவர்களுக்காகவே இத்தகைய வசதி தரப்பட்டுள்ளது.


mouse pad : சுட்டி நகர்த்து அட்டை : சுட்டியை நகர்த்து வதற்காக மிருதுவான மேற் பரப்பை அளிக்கின்ற ஏறக்குறைய 9 அங்குல சதுர அளவுள்ள துணி மூடிய ரப்பர் அட்டை.


mouse pointer : எலி வடிவ சுட்டிக்காட்டி : சுட்டியின் கட்டுப் பாட்டில் இயங்கும் திரையில் உள்ள பிம்பம் அல்லது சுட்டி (கர்சர்).


mouse port : சுட்டித் துறை : 1. பொதுவாக பீசியையொத்த கணினிகளில் சுட்டி அல்லது அதுபோன்ற சுட்டுக் கருவியை இணைப்பதற்கென்றே உள்ள பொருத்துவாய். சுட்டிக்கென ஒரு துறை இல்லையெனில், ஒரு நேரியல் துறையில் சுட்டியை இணைத்துக் கொள்ள லாம். 2. ஆப்பிள் மெக்கின்