பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/963

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΜΡR ΙΙ

962

MS-DOS mode




போதுள்ள ஈதர்நெட், டோக்கன்ரிங் மற்றும் டீசிபி/ஐபி பிணையங்களுடன் ஏடிஎம்மை ஒருங்கிணைப்பதற்கான வரன்முறைகளாகும்.


MPR II : எம்பீஆர் II : விஎல்எஃப் கதிர்வீச்சு உட்பட ஒளிக்காட்சித் திரையகத்திலிருந்து உமிழப்படும் காந்த மற்றும் மின் புலத்தைக் கட்டுப்படுத்தும் தர வரையறை ஆகும். 1987இல் அளவீடுகள் மற்றும் சோதனை களுக்கான சுவிஸ் (Swedish Board for Measurement and Testing) உருவாக்கிய தன்முனைப்புத் தர வரையறை ஆகும். 1990இல் புதுப்பிக்கப்பட்டது.


MPU : எம்பியூ : பன்முகச் செயலி அலகு எனப் பொருள்படும். 'Multi Processing Unit' என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.


. mq : . எம். கியூ : ஒர் இணையதள முகவரி மார்ட்டினிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.


mr : . எம்ஆர் : ஒர் இணைய தள முகவரி மெளரிட்டானியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.


MR : எம்ஆர் : மோடம் (இணக்கி) தயார் எனக்குறிக்கும் Modem Ready என்ற தொடரின் சுருக்கம். மோடத்தின் முன் பக்கப் பலகத்தில் (Panel) எரியும் ஒரு சிறு விளக்கு. மோடம் தயார் நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.


. ms : . எம்எஸ் : ஒர் இணைய தள முகவரி மான்ட்செர்ரட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


MSD : எம்எஸ்டி : 'மிக முக்கிய இலக்கம்' எனப் பொருள்படும் "Most significant digit" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.


MS-DOS : எம்எஸ்-டாஸ் : மைக்ரோசாஃப்ட் வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவு எனப் பொருள்படும் "Microsoft Disk Operating System" என்ற ஆங்கிலப் பெயரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது "international Business Machines Corporation" (IBM) தயாரிக்கும் சொந்தக் கணினி (PC) களில் பயன்படுகிறது.


MS-DOS mode : எம்எஸ் டாஸ் பாங்கு : விண்டோஸ் 95/98/ என்டி போன்ற 32-பிட் இயக்க முறைமைகளில் பாவிக்கப் படும் எம்எஸ்டாஸ் பணிச்