பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/965

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΜΤΤR

964

multi-access system




ΜΤΤR : எம்டீடீஆர் : பழுது பார்த்தலுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் “Mean Time To Repair" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளாறினைக் கண்டு பிடித்துச் சரிசெய்வதற்குத் தேவைப்படுமென எதிர்பார்க்கப்படும் சராசரி நேரம்.


mu : மியூ : 'μ' என்ற கிரேக்க எழுத்தின் பெயர். இது நுண்மையைக் குறிக்கும் முதலெழுத்துச் சின்னமாகப் பயன் படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டு : μS நுண் வினாடி (microp second).


μC : மியூசி : நுண்கணிப் பொறியைக் குறிக்கும் சுருக்கப் பெயர். 'μ' என்பது "மியூ" என்ற கிரேக்க எழுத்து ஆகும்.


MUD : மட்; எம்யுடி : பல் பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒரு வரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளையாட்டு. இணையத்தில் சிலவும் ஒர் மெய்நிகர் சூழல்.


MUG : எம்யூஜி : மம்ப்ஸ் பயன் படுத்துவோர் குழுமம் எனப் பொருள்படும் "Mumps Users Group" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.


multiaccess : பல்முனை அணுகல்; பன்முக அணுகல்.


multiaccess computer : பன்முக அணுகு கணினி, பல் பயன் கணினி : பல பயனாளர் ஒரே சமயத்தில் கணினித் தரவு ஆதாரங்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கணினியமைவு. இதில், இயக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சேர் முனையங்களை இணைப்பதற்கு வசதி இருக்கும். இதில் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சேர்முனையங்களை மையச்செயலகத்திலிருந்து வெகு துரத்திலுள்ள இடங்களில் அமைக்கலாம். அப்போது இவை சேய்மைச் சேர் முனையங்கள் (Remote terminals) எனப்படும். இதனை ஒரே சமயத்தில் பலர் இயக்கலாம். இந்தப் பொறியமைவு, கணிப்பொறி களையும், அதன் புறநிலைச் சாதனங்களையும் இயன்ற வரையில் மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது.


multi-access system : பன்முக அணுகு முறைமை.