பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/968

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multijob operation

967

multimedia extensions



multijob operation : பன்முகப் பணிச் செயற்பாடு; பல்பணி செயற்பாடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளை படிப்படியாக ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது பன்முகச் செயல்முறைப் படுத்துதலுடன் ஒப்பிடத்தக்கது.


multi layer : பன்முக அடுக்கு; பல் அடுக்கு : மின் முலாம் பூசிய துவாரங்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல மின் சுற்று வழி அடுக்குகளைக் கொண்ட ஒரு முன் மாதிரியான அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை.


multi level addressing : பன் முக நிலை முகவரியிடல்.


multiline : பல் கம்பி ; பல் ஒளியிழை : இரண்டு அல்லது மேற்பட்ட செய்தி அனுப்பும் பாதைகளைக் (கம்பிகள் அல்லது ஒளி இழைகள்) கொண்டுள்ள தடயம் அல்லது வழித்தடம் அல்லது குழாய்.


multiline function : பல்வரிச் சார்பு.


multilinked list : பன்முக தொடுப்புப் பட்டியல்; பல் இணைப்புப் பட்டி : ஒவ்வொரு அணுவும் குறைந்தது இரண்டு கூர் முனைகளைக் கொண்ட பட்டியல்.


multilink point - to - point protocol : பல் தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை : இணையத்தில் கணினிகள் தமது அலைக் கற்றைகளை ஒருங்கிணைக்க் தம்மிடையே பல மெய்ம்மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனைவிட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது.


multimedia : பல்லூடகம் : உரை, ஒலி, வரைகலை, அசை ஆட்டம், ஒளிக்காட்சி ஆகிய வற்றின் தொகுப்பு. கணினி உலகில் பல்லூடகம் என்பது மீஊடகத்தின் (Hypermedia) ஓர் அங்கமாக விளங்குகிறது. மீ ஊடகம் என்பது மேற்காணும் ஐந்து ஊடகங்களையும் மீஉரை யுடன் (Hypertext) இணைக்கிறது.


multimedia conference : பல் ஊடக கருத்தரங்கு; பல்லூடகக் கலந்துரையாடல்.


multimedia distributed parallel processing : பல் ஊடக இணைச் செயல்பாடு.


multimedia extensions : பல் ஊடக விரிவாக்கங்கள் : ஒலிப் பதிவு செய்தல், திரும்ப ஒலித்