பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ASCII sort order

96

assembler


அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ASCII sort order : ஆஸ்கி வரிசையாக்கம்.

ASCII string : ஆஸ்கி சரம் : சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஓர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (பூஜ்யம்) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும்.

ASIC : ஏஎஸ்ஐசி (அசிக்) : குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைப்பு மின்சுற்று என பொருள்படும் Application Specific Integrated Circuit என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சிப்பு. மற்ற சிப்புகளைவிட இதை விரைவாக உருவாக்கலாம. மாற்றங்களையும் எளிதாகச் செய்யலாம்.

ASIS : ஏஎஸ்ஐஎஸ்; அசிஸ் : தகவல் அறிவியலுக்கான அமெரிக்க சங்கம் என்பதைக் குறிக்கும் American Society for Information Science என்பதன் குறும்பெயர்.

ASM : ஏஎஸ்எம் : முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர்.

aspect card : ஆவண எண் அட்டை : தகவல் பெறும் அமைவில் உள்ள ஆவணங்களின் எண்கள் அடங்கிய அட்டை.

aspect - oriented programming : விவரண நோக்கு நிரலாக்கம்.

aspect ratio : வடிவ விகிதம் : ஒரு கணினி வரைபடத்தில் காட்சித்திரை அல்லது பட வரம்பின் உயரத்துக்கும், அகலத்துக்கும் உள்ள விகிதம்.

ASR : ஏஎஸ்ஆர் : தானியங்கு முறையில் செய்தி அனுப்புதல் மற்றும் பெறுதலுக்கான Automatic Send/Receive என்பதன் குறும்பெயர்.

assemble : இணை;தொகு : கணினி நிரல் தொகுப்பு ஒன்றுக்காக தரவுகளை சேகரித்து, பொருட்படுத்தி ஒருங்கிணைத்தல். தரவுகளை கணினி மொழிக்கு மாற்றி, அதனை கணினி பின்பற்றுவதற்காக இறுதி நிரல் தொகுப்புக்குள் இணைத்தல்.

assembler : சில்லு மொழி மாற்றி; சிப்பு மொழி பெயர்ப்பி : இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத நிரல்களை ஏற்று, அதனை கணினி பயன்படுத்தக்