பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/970

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multiple access message

969

multiple inheritance



பட்ட மாறுபட்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கும். ஒவ்வொரு அலையும் உருவாக்கும் மொத்த கள பலத்தை அது கொண்டிருக்கும். மின்னணு மண்டலம் அதன் அடர்த்தியை ஒட்டி தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதால் பாதை 1 மற்றும் 2-ன் நீளங்கள் மாறும். இந்த மாற்றம் பெறுமிடத்தில் மொத்த கள திறனை மாற்றும்.


multiple access message : பன்முக அணுகு செய்தி.


multiple-access network : பன்முக அணுகு இணையம் : ஒர் இணையத்தின் ஒவ்வொரு நிலையத்தையும் எந்த நேரத்திலும் அணுகுவதற்கான வசதியுடைய பொறியமைவு. இதில், இரு கணினிகள் ஒரே சமயத்தில் செய்தியனுப்புவதற்கு முடிவு செய்யும்போது அதற்கான நேரங்களை நிருணயிப்பதற்கான வசதி அமைந்துள்ளது.


multiple access points : பன்முக அணுகு முனைகள்.


multiple-address instruction : பன்முக முகவரி ஆணை : ஒரே செயற்பாட்டுக் குறியீட்டையும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முகவரிகளையும் கொண்டுள்ள ஆணை. பொதுவாக, இரு முகவரி, மூன்று முக வரி, அல்லது நான்கு முகவரி ஆணை என்று குறிக்கப்பட்டிருக்கும். பார்க்க : இருமுக வரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி. இது, ஒரு முகவரி ஆணைக்கு மாறுபட்டது.


multiple-address message : பன்முக முகவரிச் செய்தி : ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தி.


multiple assignment statement : பன்மதிப்பிருத்து கட்டளை.


multiple connector : பன்முக இணைப்பி : பல்வழி இணைப்பி : பல பாய்வு வரிகளை ஒரே வரிக்குள் அல்லது ஒரு பாய்வு வரியைப் பல பாய்வு வரிகளுக்குள் ஒருங்கிணைப்பதைக் குறிக்கும் இணைப்பி.


multiple inheritance : பல்வழி மரபுரிமம்; பன்முக மரபுரிமை : சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய இனக்குழுவை உருவாக்க அனுமதிக்கும் செயல்முறை. இருக்கும் தரவு இனங்களை நீட்டிக்கவும்