பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/972

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multiplex

971

multiplier



பயனாளர் அமைவு : ஒரே சமயத்தில் பலர் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள கணிப்பொறியமைவு.


multiplex : பன்முகப் பயன் பாட்டுப் பொறியமைவு : பன்மையாக்கி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பயன்படுத்துவதற்கு அனுமதி யளிக்கும் பொறியமைவு.


multiplexer : ஒருங்கிணைப்பி; பல் பலன் தொகுப்பி.


multiplexing : ஒன்றுசேர்த்தல்; ஒருங்கிணைத்தல் : தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். ஒரே தடத்தில் பயணிக்கும் வெவ்வேறு தரவு சமிக்கைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமல் இருக்க நேரம், இடைவெளி அல்லது அலை வரிசை - இவற்றில் ஒன்றால் பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு சமிக்கைகளை ஒன்றிணைக்கப் பயன் படும் சாதனம் ஒன்றுசேர்ப்பி அல்லது ஒருங்கிணைப்பி (multiplexer) என்று அழைக்கப் படுகிறது.


multiplexor (MPX) : பன்முகக்கணினி; பல் பயன் தொகை; பன்மையாக்கி : ஒரு கிணினித் தகவல் வழியினைப் பலர் பகிர்ந்து கொள்வதற்குப் பல செய்தித் தொடர்புப் பாதைகளை அனுமதிக்கும் சாதனம்.


multiplexor channel : பன்முகக் கணினி வழி; பன்மையாக்கத் தடம் : ஒரு தனி வகை உட்பாட்டு/வெளிப்பாட்டுக் கணினி வழி. இது, ஒரு கணினிக்கும், ஒரே சமயத்தில் செயற்படும் புறநிலையச் சாதனங்களுக்கு யிடையில் தரவுகளை அனுப்ப வல்லது. இது தேர்திறக் கணினி வழியிலிருந்து வேறுபட்டது.


multiplexor, data channel : தரவுத் தட ஒன்று சேர்ப்பி.


multiplication : பெருக்கல்


multiplication time : பெருக்கல் நேரம் : ஒர் இரும எண்ணுக்கான பெருக்கலைச் செய்வதற்குத் தேவைப்படும் நேரம். இது, பெருக்கல் செயற்பாட்டில் அடங்கியுள்ள கூட்டல் நேரங் கள் அனைத்திற்கும் அகற்சி நேரம் அனைத்திற்கும் சமமான தாகும்.


multiplier : பெருக்கி; பெருக்கெண் : 1. கணக்கீட்டில் ஒர் எண்ணை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக்