பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/973

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multiplier, digital

972

multiprocessor



குறிக்கும் எண். 4x5 என்பதில் 4 என்பது பெருக்கப்படு எண். 5 என்பது பெருக்கெண்.

2. கணினியில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம். மையச் செயலகத்தின் புறத்தே இருப்பது. பெருக்கல் கணக்கீடுகளை இது செய்யும். தொடர் கூட்டல் முறையில் இது நிறைவேற்றப் படும். 4x5 எனில் 4 என்ற எண் 5 முறை கூட்டப்படும்.


multiplier, digital : இலக்கப் பெருக்கி.


multipoint configuration : பல் முனை தகவமைவு : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. பல நிலையங்கள் தொடர்ச்சியாக ஒரே தகவல் தொடர்புத் தடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, தரவு தொடர்பு இணைப்பை ஒரு முதன்மை நிலையம் (ஒரு தலைமைக் கணினி) நிர்வகிக்கும். இணைக்கப்பட்ட ஏனைய நிலையங்கள் அதன் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும்.


multipoint line : பல்முனைக் கம்பி : மூன்று அல்லது மேற்பட்ட சாதனங்களை ஒன்றோ டொன்று இணைக்கும் ஒரு தனிக் கம்பி.


multiported memory : பல் இணைப்பு நினைவகம் : ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு பாதை மூலம் அதன் உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கும் நினைவகம். அதே நினைவகப் பகுதியை ஒரே வேளையில் படிக்கவும் எழுதவும் அது அனுமதிக்கிறது.


muItiprecision arithmetic : பன்முக எண் கணக்கியல் : ஒவ்வொரு எண்ணையும் குறிப்பதற்கு இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிச் சொற்கள் பயன் படுத்தப்படும் கணித வடிவம்.


multiprocessing : பல் நிரலாக்கம்; பன்முகச் செய்முறைப்படுத்தல்; பன்மைச் செயலாக்கம் : பொதுவான கட்டுப் பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல்.


multi processing arithmetic : பன்முக செயலாக்க எண் கணிதம்.


multiprocessor : பல் செயலி; பன்முகச் செய்முறைப்படுத்தி; பன்மைச் செயலகம் : ஒரே பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மையச்