பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/975

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

multisystem network

974

multithreading



பட்ட செங்குத்து மற்றும் கிடை மட்ட ஒத்திசைவு வீதங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன்பெற்ற ஒரு கணினித் திரையகம். அத் திரையகங்களுக்கு பல்வேறு வகைப்பட்ட தகவிகளைப் (Adapters) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அவை ஒளிக்காட்சிச் சமிக்கை யில் ஒத்திசைவு வீதத்துக்கு ஏற்ப தாமாகவே தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.


multisystem network : பன்முகப் பொறியமைவுப் பிணையம் : பன் முறை பொறியமைப்புப் பிணையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தாய்க் கணினிகளைக் கொண்டிருக்கிற செய்தித் தொடர்புகள். இது, செய்தித் தொடர்பு கொள்வதற்கு எந்தக் கணினியைப் பயன்படுத்த ஒரு சேர்முனையம் விரும்புகிறதோ அந்தக் கணினியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இயல்விக்கிறது.


multi task : பல் பணி


multitasker : பல்செயலாற்றல் : பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்க, முன்னணியில் திரையில் உள்ள நிரல் தொடரை நீங்கள் இயக்கலாம்.


multitasking : பன்முகப் பணியாக்கம்; பன்முறைப் பணியாக்கம் : ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு கணினியின் திறம்பாடு.


multitask operation : பன்முகப்பணிச் செயற்பாடு : பல் பணியாக்கம் : ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இயங்கும் ஒரு செயல்முறையினுள் உள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள்.


multithreaded application : பல்புரிப் பயன்பாடு : ஒரே நேரத்தில் ஒரு நிரலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைப் பணிகள், கிளைநிரல் புரி களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவது. இந்த முறையில் செயலி வாளா இருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.


multithreading : பல் நூலிழைத்தல் : ஒரு தனி நிரல் தொடருக்குள் பல் பணி ஆற்றுதல். ஒரே நேரத்தில் பரிமாற்றங்களையும் செய்திகளையும் அது செயலாக்கம் செய்யும். ஒரே நேரத்தில்