பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/977

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mus

976

ΜVΤ




மியூ என்ற கிரேக்க எழுத்து. இது நுண்மையைக் குறிக்கும் குறியீடாகும்).

mus : மியூஎஸ் : நுண் வினாடி என்று பொருள்படும் 'µs' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். 'µ' என்ற கிரேக்க எழுத்து நுண்மையைக் குறிக்கும்.

MUSE : மியூஸ் : பல்பயனாளர் பாவிப்புப் பணிச்சூழல் என்று பொருள்படும் Multi User Simulation Environment என்பதன் சுருக்கம்.

musical language : இசை மொழி : கணினி உட்பாட்டுக்குப் பொருத்தமான குறியீட்டில் இசைச் சுரங்களைக் குறிப்பதற்கான முறை.

musicomp : இசைச்செயல்முறை மொழி; இசையமைப்பு : இசையமைப்புச் செயல்முறை மொழி. இது மூல இசைச் சுரங்களை உருவாக்குவதற்கும் இசை ஒருங்கிணைப்புக்கும் வழி செய்யும் நுட்பங்களை அளிக்கிறது.

music synthesizer : இசை இணைப்பி : இசையைப் பதிவு செய்வதற்கும், ஒளி பரப்புவதற்கும் ஒரு கணினியுடன் இணைக்கப்படும் சாதனம்.

mute : ஒலி நிறுத்தம்.

mutual exclusion : பரஸ்பர விலக்கம் : ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுகுவதை உறுதிப்படுத்தும் முறை. அறைக் கதவில் நான் வேலையாய் இருக்கிறேன்; இடையூறு செய்யாதீர் என்று ஒர் அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு உள்ளே பணிகளை மேற்கொள்ளும் முறையை ஒத்தது. ஒர் அறிவிப்புக் குறிப்பு அல்லது குறியீடு (semaphores/flags) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களின்/ நிரல் கூறுகளின் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுகின்றன.

MUX : மக்ஸ் : 'Multiplexor என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.

. mv : . எம்வி : ஒர் இணைய தள முகவரி மாலத் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

MVC architecture : எம்விசி கட்டுமானம்.

MVT : எம்விடீ  : ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப்