பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/979

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. na

978

name of the font


N

. na : . என். ஏ : ஒர் இணையதள முகவரி, நமீபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

naive user : கற்றுக்குட்டி.

NAK : நேக் : ஏற்காமை அறிவிப்பு : Negative Acknowledgement என்பதன் குறும்பெயர். ஒரு செய்தி பெறப்பட்டது அல்லது ஒரு முகப்பு அதை அனுப்ப விரும்பவில்லை என்பதைக் குறிக்கும் தரவுத் தொடர்புக் குறியீடு.

NAL : என்ஏஎல் : ஆப்பிள் National Aeronautical Laboratory என்பதன் குறும்பெயர். பெங்களூரில் உள்ள இந்திய அரசின் நிறுவனமான தேசிய விமானவியல் ஆய்வகம்.

name : பெயர் : நிரல் தொடர், கட்டுப்பாட்டுச் சொற்றொடர் வாக்கியம், தரவு பகுதிகள் அல்லது பட்டியலிடப்பட்ட செயல்முறை போன்றவைகளை அடையாளம் காட்டும் எண்ணெழுத்துத் தொடர்.

name and location : பெயரும் இருப்பிடமும்.

name box : பெயர்ப் பெட்டி.

named anchor : பெயரிட்ட நங்கூரம் : ஹெச்டீஎம்எல் மொழி ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிசொல். ஒரு மீத்தொடுப்புக்கான இலக்கைக் குறிக்கிறது. பெயரிட்ட நங்கூரங்கள் பயனுள்ளவை. ஏனெனில் ஓர் ஆவணத்துக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு தொகுப்பின் மூலம் தாவிச் செல்லப் பயன்படுகிறது. பெயரிட்ட இலக்கு என்றும் அழைக்கப்படும்.

named pipes : நேம்டு பைப்ஸ் : சிறு பரப்பு இணைய நிர்வாகி ஐ. பி. சி. சலுகை. ஒரு இணையத்தில் அல்லது ஒரே கணினிக்குள்ளே ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பயன்பாட்டிலிருந்து மற்றொன்றுக்கு தரவுகளை மாற்ற அனுமதிப்பது. செயலாக்கங்களுக்கிடையிலான தரவு தொடர்புகளுக்கு 'பைப்" (pipes) என்ற சொல்லை யூனிக்ஸ் உருவாக்கியது.

name field : பெயர்ப் புலம்.

name, file : கோப்புப் பெயர்.

name of the font : எழுத்துருவின் பெயர்.