பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

assembler directive

97

associate


கூடிய எந்திர மொழி வடிவத்துக்கு மாற்றுவது.

assembler directive : சிப்பு மொழி மாற்றி நெறியுறுத்தம் : ஒரு சிப்பு மொழி நிரலில் தரப்படும் மாற்றி. இதனை அடையாளம் கண்டு அதன்படி செயல்படும்.

assembling : தொகுத்தல் : ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை.

assembly : தொகுப்பு : சேர்ப்பு : ஒருங்கிணைந்த மின்சுற்றை கம்பிகளால் இணைத்து ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் செயல்.

assembly language : சில்லு மொழி : சிப்பு மொழி : இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாக குறியீட்டுச் சொற்களை (mneumonic codes) கொண்டு எழுதப்படும் கணினி மொழி.

assembly listing : தொகுப்பு பட்டியல் : தொகுப்பி ஒன்றினால் தயாரிக்கப்பட்ட அச்சுத் தயாரிப்பு.

assembly programme : தொகுப்பு மொழி நிரல் : சிப்பு மொழி நிரல்.

assertion : உறுதிப்படுத்துதல் : மதிப்பீட்டை உண்மையாக்கும் ஒரு பூலியன் வாக்கியம்.

assign : மதிப்பிருத்து : குறித்தளி,

assigned number : குறித்தளித்த எண்.

assign macro : குறுநிரல் குறித்தளி.

assignment : குறித்தளித்தல் : மதிப்பிருத்தல்.

assignment operator : மதிப்பிருத்தும் செயற்குறி : மதிப்பிருத்தும் செய்முறைக் குறி; மதிப் பிருத்தும் இயக்கி : ஒரு மாறியில் (variable) அல்லது ஒரு தரவுக் குழுவில் (data structure) ஒரு மதிப்பை இருத்தி வைக்கப் பயன்படும் செயற்குறி அல்லது குறியீடு. பெரும்பாலும் = என்னும் அடையாளம் இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

assignment statement : மதிப்பிருத்தல் கூற்று : ஒரு மாறியில் (variable) ஒரு குறிப்பிட்ட மதிப்பினை இருத்தப் பயன்படும் கட்டளை.

associate : உறவுபடுத்து : தொடர்புறுத்து : ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் (extension) ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்க முறைமை (operation system) -க்கு அறிவித்தல். ஒரு கோப்