பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/980

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

979


name server

979

nanosecond name server : பெயர் வழங்குபவர் : இணையத் தொடர்புப் பெயர்களையும் எண் ஐ. பி. முகவரிகளையும் கவனிக்கின்ற டாசில் இயங்கும் கணினி. பெயரை ஒரு பருப்பொருள் முகவரியாக மாற்றும் மென் பொருள். பெயர்கள் என்பவை பயனாளர் பெயர்கள், கணினிகள், அச்சுப்பொறிகள், சேவைகள் அல்லது கோப்புகள் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

name value pair : பெயர்-மதிப்பு இணை : பேர்ல் (perl) நிரலாக்க மொழியில் ஒரு தரவு தொகுதியில் தகவலானது ஒரு குறிப்பிட்ட பெயருடன் தொடர்புடையதாயுள்ளது.

NAMPS : நாம்ப்ஸ் : குறுங்கற்றை தொடர்முறை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும் Narrow Band Analog Mobile Phone Service என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். மோட்டோரோலோ நிறுவனம் முன்வைத்த தர வரையறை. தற்போதைய ஆம்ப்ஸ் (AMPS) செல் தொலைபேசி தரவரையறையை இலக்க முறைக் சமிக்கைத் தகவலுடன் இணைத்து உருவாக்கப்பட்டது. உயர் செயல்திறன் மற்றும் அதிக ஆக்கத்திறனும் கிடைக்கும்.

NAND : நந்த் : Not-and என்பதன் குறுக்கம். இது ஒரு அளவை இயக்கி. P ஒரு கூற்று; Q ஒரு கூற்று என்றால் P, Q வின் நந்த் உண்மையாக வேண்டுமானால் ஒரு கூற்றாவது பொய்யாக இருக்கவேண்டும் அல்லது எல்லா கூற்றுகளும் உண்மையாக இருந்தால் நந்த் பொய்யாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது. Not, and இரண்டும் இணைந்தது.

nano : நானோ : ஒரு கோடியில் ஒன்று என்பதை உணர்த்தும் முன்னொட்டு.

nanoacre : நானோக்கர் : கணினியின் சிப்புப் பரப்பைக் குறிப்பிடும் அலகு. ஒரு ஏக்கரில் நூறு கோடியில் ஒன்று. ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றின் பரப்பைக் குறிப்பிடுவது.

nanocomputer : நானோ கணினி : ஒரு நொடியில் நூறு கோடியில் ஒரு பங்கு நேரத்தில் செயலாக்கம் செய்யவல்ல கணினி.

nanosecond : நானோ நொடி : ஒரு நொடியில் பில்லியனில் ஒன்று. ஒரு நொடியில் ஆயிரம் மில்லியனில் ஒன்று. ns என்று சுருக்கப்படுவது. மில்லி, மைக்ரோ நொடி போன்றது. இப்போது உருவாக்கப்படும் கணினிகள் ஒரு நானோ